மங்களூர், மே.22: துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 159 பேர் பலியானார்கள்.
துபாயில் இருந்து இன்று காலை 166 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் மங்களூர் விமான நிலைத்துக்கு வந்தது. விமான நிலையத்தின் ஓடு தளத்தில் தரையிறங்க முற்பட்ட போது தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி 159 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. விமானத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. விமானத்தில் பயணம் செய்தவர்களின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
விமான ஊழியர்கள் 6 பேர் மற்றும் 4 குழந்தைகள் உட்பட 166 பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
விபத்திற்குள்ளான விமானம் போயிங் 737 ரகத்தைச் சேர்ந்தது. இந்த விமானத்தின் பைலட் ரஷ்யாவைச் சேர்ந்தவர்.
மத்திய அமைச்சர்கள் பிரபுல் பட்டேல், வீரப்ப மொய்லி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ஏர்-இந்தியா தகவல் உதவிப் பிரிவுக்கான தொலைபேசி எண்கள்:
மங்களூர்: 0824-2451046, 2451047
பெங்களூர்: 080-66785172, 080-22273310
மும்பை: 022-22796161
துபை: 00971-2165828, 2165829
Filed under: பொதுவானவை | Tagged: மங்களூர்-வந்த-ஏர்-இந்திய |
மறுமொழியொன்றை இடுங்கள்