அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக…ஆமின்.
சமீபத்தில் பாலஸ்தீன சிறுவர்களின் நிலை குறித்த ஒரு கட்டுரையை “உன்னதம்” இதழுக்காக மொழிப்பெயர்க்கும் வாய்ப்பு கிட்டியது. அல்ஹம்துலில்லாஹ். மனதில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய அந்த கட்டுரை உங்கள் முன் இங்கு பதியப்படுகிறது…
சர்வதேச சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பு (Defense for Children International – Palestine Section) – பாலஸ்தீன கிளை, ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பதை தன் குறிக்கோளாக கொண்ட அமைப்பு.
ரிபத் கஸ்சிஸ் (Rifat Kassis) இதனுடைய தலைவராக 2005 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக பதவியில் உள்ளார். சமீபத்தில் “The Electronic Intifada” என்னும் இணையப்பத்திரிக்கையை சேர்ந்த அட்ரி நிவ்ஹோப் (Adri nieuwhof) இவரிடம் நேர்க்காணல் நடத்தினார். அப்போது ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள சிறுவர்களின் நிலை குறித்து ரிபத் கஸ்சிஸ் விளக்கினார்.
அட்ரி நிவ்ஹோப்: உங்கள் அமைப்பை பற்றியும், நீங்கள் இங்கு செய்யக் கூடிய பணி பற்றியும் விளக்கவும்.
ரிபத் கஸ்சிஸ்: எங்கள் அமைப்பு பணியாற்ற தொடங்கி இது பத்தொன்பதாம் வருடம். இதை நான் மற்றவர்களுடன் சேர்ந்து தொடங்கினேன். சின்னதாக எளிமையாக தொடங்கப்பட்ட இந்த அமைப்பை இப்போது பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. இங்குள்ள சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதும், குறிப்பெடுத்துக் கொள்வதும், அந்த சிறுவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் தான் எங்களின் முதன்மையான பணி.
அதுமட்டுமல்லாமல் உள்நாட்டு கலவரங்களில் சிறுவர்கள் பாதிக்கப்படாமல் காப்பதும் எங்கள் பொறுப்பு. உதாரணத்துக்கு இங்குள்ள (பாலஸ்தீனம்) கல்வி அமைச்சகத்துடன் இணைந்து, சிறுவர்கள் உடல் ரீதியாக தண்டிக்க படுவதையும், மற்ற சமூக தொண்டு நிருவனங்களுடன் சேர்ந்து சிறுவர்களின் உரிமைகளை காப்பதும், அவர்களை பணிகளில் சேர்ப்பது பற்றியும், சிறுவர்கள் தங்களுக்கான உரிமைகளை தெரிந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அழைப்பு விடும்படியும், அதன்மூலம் உள்நாட்டு கலவரங்களையும், சிறுவர்கள் உடல் ரீதியாக தண்டிக்கப்படுவதையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் எண்ணுகிறோம்.
அ: இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன சிறுவர்கள் மீதான முக்கிய குற்றச்சாட்டு என்ன?
ரி: எங்களிடம் உள்ள தகவலின் படி ஒவ்வொரு வருடமும் சுமார் 700 சிறுவர்கள் இஸ்ரேலிய நீதிமன்றங்களால் குற்றஞ்சாட்டபட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், அதாவது சுமார் 26%, இஸ்ரேலிய ராணுவத்தின் மீது கல்லெறிந்ததால் பிடிக்கப்பட்டவர்கள்.
மற்ற காரணங்கள், தடை செய்யப்பட்ட அரசியல் பணிகளில், ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றது போன்றவை. இப்படி சிறையில் உள்ள சிறுவர்களில் பனிரெண்டு வயது சிறுவர்கள் கூட உண்டு.
அ: இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன சிறுவர்களின் அனுபவங்கள் குறித்து கூற முடியுமா?
ரி: நாங்கள் இந்த சிறுவர்களிடமிருந்தும், அவர்களது பெற்றோர்களிடமிருந்தும், அவர்களது வழக்கறிஞர்களிடமிருந்தும், ஒரே விதமான தகவல்களையே பெறுகிறோம். அதாவது இஸ்ரேலிய வீரர்கள் இரவிலோ, விடியற்காலையிலோ, சிறுவர்களின் வீட்டிற்கு வருவார்கள். பெரும் இரைச்சல் போட்டுக்கொண்டு காட்டமான முறையில் வீட்டிற்குள் நுழைவார்கள். அந்த சிறுவர்களின் பெற்றோர்களிடம் எந்த ஒரு காரணமும் கூறாமல் சிறுவர்களை அழைத்து சென்று விடுவார்கள். சில சிறுவர்கள் சோதனைச் சாவடிகளில் வைத்து கைது செய்யப்படுவதும் உண்டு.
சிறுவர்கள் அவர்களது வீட்டிலிருந்து அழைத்து செல்லப்படும்போது அந்த வீரர்கள் கத்துவார்கள், “இங்கே யார் முஹம்மது”. அந்த முஹம்மது என்ற சிறுவனுக்கு 12-13 வயது இருந்தாலும் சரி, கண்டுக்கொள்ளமாட்டர்கள். அவனை உதைப்பார்கள், கண்ணை கட்டுவார்கள், அவன் கைகளை பிளாஸ்டிக் கயிறுகளால் அவன் வலியுனால் துடிக்குமளவு கட்டுவார்கள். பின்னர் அவர்களது வாகனத்திற்கு பின்னால் அவனை போட்டுக்கொண்டு சென்று விடுவார்கள். வாகனத்தில் வைத்தும் அடிப்பார்கள். இது அந்த சிறுவர்களுக்கு உளவியல் ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தும்.
அந்த சிறுவர்கள் கொண்டு செல்லப்பட்ட இடத்தில், ஒன்று சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது கேள்வி கேட்க அழைத்து செல்லப்படுவார்கள். கேள்வி கேட்கப்படும்போதும் அவர்கள் உதைக்கப்படுவார்கள், அடிக்கப்படுவார்கள், தவறான வார்த்தைகளால் திட்டப்படுவார்கள். அவர்களது குடும்பங்களை அழித்து விடுவோம் என்றும், அவர்களுடைய தாய்மார்கள் கற்பழிக்கப்படுவார்கள் என்றும் மிரட்டப்படுவார்கள்.மேலும் படிக்க…
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
Filed under: பொதுவானவை | Tagged: பாலஸ்தீன-சிறுவர்களின்-நி |
மறுமொழியொன்றை இடுங்கள்