ஜெயலலிதா தங்கும் சிறுதாவூர் பங்களா நிலம் ஆர்ஜிதம்: அரசு உத்தரவு

Front page news and headlines today

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் அடிக்கடி சென்று தங்கி வரும் சிறுதாவூர் பங்களா அமைந்துள்ள நிலத்தை கையகப்படுத்த, அரசு உத்தரவிட்டு உள்ளது. எனினும், சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக உள்ள வழக்கு முடியும் வரை மீட்பு நடவடிக்கையை நிறுத்தி வைக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு தாலுகா சிறுதாவூர் கிராமத்தில் பிரம்மாண்ட பங்களா உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் இந்த பங்களாவை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பங்களா அமைந்துள்ள நிலம், அரசால் இலவசமாக ஏழைகளுக்கு தானமாக வழங்கப்பட்ட தாகவும், அந்த நிலம் அபகரிக்கப் பட்டுள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டினர். முறைகேடாக இந்த நிலம் அபகரிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க, ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்ரமணியம் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. 2006 ஜூலை 27ம் தேதி அமைக்கப்பட்ட இந்த கமிஷன், இரண்டு மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு உட்பட பல காரணங்களால், மூன்று ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்கள் தாமதமாக, கடந்த பிப்ரவரியில் கமிஷனின் அறிக்கை, அரசிடம் வழங்கப்பட்டது. இந்த அறிக்கை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் படிக்க…

ஈரானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்கர்களை குடும்பத்தவர் சந்திக்க அனுமதி

File:Mahmoud Ahmadinejad.jpg

தெஹ்ரான்: ஈரானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய குற்றச்சாட்டிற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று அமெரிக்கர்களை அவர்களது குடும்பத்தினர் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூன்று அமெரிக்கர்களையும் அவர்களது குடும்பத்தினர் சந்திப்பதற்காக ஈரானுக்கு பயணிப்பதற்கான விசாவினை வழங்குமாறு அமெரிக்காவிலுள்ள ஐ.நா.தூதுவருக்கு ஈரான் உத்தரவிட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மனிதநேய அடிப்படையிலேயே ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் மனோச்சர் மொட்டாகி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்களான ஷனே பௌர்,சரா சௌட் மற்றும் ஜோஸ் பற்றால் ஆகியோர் ஈரானில் வேவு பார்ப்பதற்காக சட்டத்திற்கு முரணாக நாட்டுக்குள் நுழைந்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த வருடம் ஜூலை 31 இல் எல்லை காப்பு படையினரால் கைது செய்யப்பட்டிருந்த இம்மூவரும் அமெரிக்க உளவுப்பிரிவுடன் தொடர்பினைக்கொண்டிருப்பதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த மூன்று அமெரிக்கர்களும் நண்பர்களாக இருப்பதுடன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுமிருந்தனர்.

இந்நிலையில், இம்மூவரையும் குடும்ப உறுப்பினர்கள் சிறைச்சாலைகளில் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தும் அதற்குரிய திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

ஆனால், தமது பிள்ளைகளை சந்திப்பதற்கு ஈரான் மூன்றாவது தடவையாக இவ்வாறு அனுமதித்துள்ளதாகவும் ஒருபோதும் சந்திப்பதற்கு அனுமதி வழங்குவதில்லையெனவும் மூன்று அமெரிக்கர்களினதும் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

-இறை நேசன்-