தலை வீங்கிய குழந்தைக்கு கோவையில் சிகிச்சை

Important incidents and happenings in and around the  world

கோவை : தலை வீங்கிய நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆறு மாத குழந்தை, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., டாக்டர் சிவப்பிரகாசம் கூறியதாவது: திருப்பூர் – தாராபுரம் ரோட்டில் அரசு தலைமை மருத்துவமனை அருகே, தலை வீங்கிய நிலையில் இருந்த ஆண் குழந்தை நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக இக்குழந்தை நேற்று, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் சேர்க்கப்பட்டது. குழந்தைக்கு ‘ஹைட்ரோ செப்பாலஸ் (தலையில் நீர்கோர்ப்பு)’ என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆறு மாத குழந்தையின் தலை அரைக்கிலோ எடைதான் இருக்க வேண்டும். ஆனால், இக்குழந்தையின் தலைப் பகுதி மட்டும் ஐந்து கிலோ எடை உள்ளது; ஆறு மாத சராசரி குழந்தையின் மொத்த எடை 5 கிலோ இருக்க வேண்டும். மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இக்குழந்தை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படும். நரம்பியல் அறுவை சிகிச்சைத்துறை நிபுணர்கள் பரிசோதித்த பின், இக்குழந்தைக்கு மேற்கொண்டு, அறுவை சிகிச்சை அளிக்கப்படுமா என்பது குறித்து தெரிய வரும். தற்போது குழந்தையின் உடல் நிலை நன்றாக உள்ளது. இவ்வாறு, ஆர்.எம்.ஓ..தெரிவித்தார்.

dinamalar