டி.வி., ரியாலிட்டி ஷோவில் நிர்வாண நடனத்தால் பரபரப்பு



Obscene dance in Tv reality show

டி.வி.,க்களில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதும், ஆட்டம் போடும் பெண்களை ஆபாசமாக வர்ணிப்பதும் டி.வி., சேனல்களுக்கு புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முளைத்து, இன்று விஸ்வரூபமாக வளர்ந்திருக்கும் இந்த புது கலாச்சாரத்தில் சமீபகாலமாக குழந்தைகளும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களும் சினிமா திரையில் தோன்றும் கவர்ச்சி நடிகைக்கு நிகராக குழந்தைகளை மேடையில் ஆட விட்டு ரசிக்கிறார்கள். இந்த விவகாரம்தான் இப்போது ஆந்திர சின்னத்திரை வட்டாரத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

குழந்தைகளை அரை நிர்வாண ஆட்டம் போட வைக்கும் தனியார் டி.வி., சேனல்கள் மீது ஆந்திராவை சேர்ந்த சமூக சேவகி ஒருவர் மனித உரிம‌ை கமிஷனில் புகார் செய்தார். அதில், ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தனியார் டி.வி.க்கள் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட வைக்கின்றனர். இது பிஞ்சு உள்ளங்கள் மனதில் விஷ கலாசாரத்தை பரப்புவதாக உள்ளது. தனியார் டி.வி.க்கள் தங்களது நிகழ்ச்சியை பிரபலப்படுத்த எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அதை விட்டுவிட்டு குழந்தைகளை அலங்கோலமாக்கி ஆட வைப்பது நல்லதல்ல. இது அந்த சிறுமிகளின் எதிர் காலத்தை கடுமையாக பாதிக்கும். பெற்றோர்களும் டி.வி. சானல்கள் தரும் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் குழந்தைகளை ஆட விடுகிறார்கள். எனவே குழந்தைகளை நிர்வாணமாக ஆட விடும் டி.வி.சானல் உரிமையாளர்கள், பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

சின்னத்திரை உலகத்தையே பரபரக்க வைத்த இந்த புகார் குறித்து ஆந்திர மனித உரிமை கமிஷனர் சுபாஷன் ரெட்டி விசாரித்தார். அப்போது அரை நிர்வாண நடனம் ஆடிய குழந்தைகளின் பெற்றோர் மற்றும் டி.வி., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது சுபாஷன் ரெட்டி கூறுகையில், டி.வி., சானல்களில் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட விடுவது குற்றமாகும். இது நம் நாட்டின் கலாசாரத்திற்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியது. குழந்தைகளை வலுக்கட்டாயமாக இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் பெற்றோர் ஆட விடக்கூடாது. இது குழந்தைகளின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இனியும் பெற்றோரும், டி.வி. சேனல் நிர்வாகிகளும் குழந்தைகளை அலங்கோலப்படுத்தி ஆடவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த விவகாரத்தில் திருந்த வேண்டியது தனியார் டி.வி., சேனல்களா அல்லது டி.வி., மோகத்தால் குழந்தைகளை அரைகுறை ஆடையுடன் ஆபாச ஆட்டம் போடவைக்கும் பெற்றோர்களா?

dinamalar

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: