Posted on ஏப்ரல் 27, 2010 by Nallur Peer

அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ‘ பார்க்கும்’ வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர்.
இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி ‘ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ‘ ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது. இது கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல் வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.
கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது. இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர் , பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர் உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும் படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள். அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும் ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம்.
dinakaran
Filed under: அறிவியல் | Tagged: கண்-பார்வையற்றோர்-தங்கள் | Leave a comment »
Posted on ஏப்ரல் 27, 2010 by Nallur Peer

டி.வி.,க்களில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதும், ஆட்டம் போடும் பெண்களை ஆபாசமாக வர்ணிப்பதும் டி.வி., சேனல்களுக்கு புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முளைத்து, இன்று விஸ்வரூபமாக வளர்ந்திருக்கும் இந்த புது கலாச்சாரத்தில் சமீபகாலமாக குழந்தைகளும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களும் சினிமா திரையில் தோன்றும் கவர்ச்சி நடிகைக்கு நிகராக குழந்தைகளை மேடையில் ஆட விட்டு ரசிக்கிறார்கள். இந்த விவகாரம்தான் இப்போது ஆந்திர சின்னத்திரை வட்டாரத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
குழந்தைகளை அரை நிர்வாண ஆட்டம் போட வைக்கும் தனியார் டி.வி., சேனல்கள் மீது ஆந்திராவை சேர்ந்த சமூக சேவகி ஒருவர் மனித உரிமை கமிஷனில் புகார் செய்தார். அதில், ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தனியார் டி.வி.க்கள் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட வைக்கின்றனர். இது பிஞ்சு உள்ளங்கள் மனதில் விஷ கலாசாரத்தை பரப்புவதாக உள்ளது. தனியார் டி.வி.க்கள் தங்களது நிகழ்ச்சியை பிரபலப்படுத்த எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அதை விட்டுவிட்டு குழந்தைகளை அலங்கோலமாக்கி ஆட வைப்பது நல்லதல்ல. இது அந்த சிறுமிகளின் எதிர் காலத்தை கடுமையாக பாதிக்கும். பெற்றோர்களும் டி.வி. சானல்கள் தரும் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் குழந்தைகளை ஆட விடுகிறார்கள். எனவே குழந்தைகளை நிர்வாணமாக ஆட விடும் டி.வி.சானல் உரிமையாளர்கள், பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
சின்னத்திரை உலகத்தையே பரபரக்க வைத்த இந்த புகார் குறித்து ஆந்திர மனித உரிமை கமிஷனர் சுபாஷன் ரெட்டி விசாரித்தார். அப்போது அரை நிர்வாண நடனம் ஆடிய குழந்தைகளின் பெற்றோர் மற்றும் டி.வி., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது சுபாஷன் ரெட்டி கூறுகையில், டி.வி., சானல்களில் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட விடுவது குற்றமாகும். இது நம் நாட்டின் கலாசாரத்திற்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியது. குழந்தைகளை வலுக்கட்டாயமாக இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் பெற்றோர் ஆட விடக்கூடாது. இது குழந்தைகளின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இனியும் பெற்றோரும், டி.வி. சேனல் நிர்வாகிகளும் குழந்தைகளை அலங்கோலப்படுத்தி ஆடவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரத்தில் திருந்த வேண்டியது தனியார் டி.வி., சேனல்களா அல்லது டி.வி., மோகத்தால் குழந்தைகளை அரைகுறை ஆடையுடன் ஆபாச ஆட்டம் போடவைக்கும் பெற்றோர்களா?
dinamalar
Filed under: பொதுவானவை | Tagged: டி-வி-ரியாலிட்டி-ஷோவில்-ந | Leave a comment »