செக்ஸ் சாமியார் நித்யானந்தாவிடம் நடந்த விசாரணையில் புது தகவல்கள்

பெங்களூரு:கர்நாடகா சி.ஐ.டி., போலீசாரின் வசமுள்ள சாமியார் நித்யானந்தாவிடம் நேற்று ரகசியமாக விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது, அவரிடமிருந்து புதுப் புது தகவல்களைக் கேட்ட சி.ஐ.டி., போலீசார், அதிர்ந்தனர். நேற்று அவரை பிடதி ஆசிரமத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவர் எதிரிலேயே சோதனையிட்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். அது குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று மறுத்து விட்டனர்.இமாச்சல பிரதேசத்திலிருந்து பெங்களூரு வந்த நித்யானந்தாவையும், அவரது சீடர் நித்ய பக்தானந்தாவையும், நேற்று முன்தினம் இரவு 9.20 மணியளவில், ராம்நகருக்கு அழைத்து வந்தனர். ராம்நகர் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நித்யானந்தா அனுமதிக்கப்பட்டார். இரவு 10.25 வரை அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

பின், நீதிபதி புஷ்பாவதி வீட் டிற்கு, இருவரும் காரில் அழைத்து செல்லப்பட்டனர். ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி புஷ்பாவதி வீட்டில் சாமியாரும், அவரது சீடரும், இரவு 10.35 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.பின், வெளியே வந்த அரசு வழக்கறிஞர் வாரப் கூறுகையில், ”நித்யானந்தாவையும், அவரது சீடர் பக்தானந்தாவையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, போலீஸ் தரப்பில் கேட்டுக் கொண்டனர். நாளை மறுதினம் வரை இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிபதி அனுமதி அளித்துள்ளார். நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. நித்யானந்தாவை, போலீசார் துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தன்னை போலீசார் துன்புறுத்தவில்லை என்றும், நல்லபடியாக கவனிப்பதாகவும் நீதிபதி முன்னிலையில் நித்யானந்தா கூறினார்,” என்றார்.நீதிபதி வீட்டிலிருந்து நித்யானந்தாவை போலீசார் வெளியே அழைத்து வந்த போது, யாரோ ஒரு நபர், சாமியாரை தகாத வார்த்தையால் திட்டியவாறு அடிக்க முயற்சித்தார். உடனடியாக அருகிலிருந்த போலீசார், அந்த மர்ம நபரை இழுத்துச் சென்றனர். பின், அந்த நபரை போலீஸ் வேனில் ஏற்றி, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின், சாமியாரையும், அவரது சீடரையும், போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.பெங்களூரு பேலஸ் ரோட்டிலுள்ள சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில், நித்யானந்தாவிடம் நேற்று காலையிலிருந்து அதிகாரிகள் குழு விசாரணையை துவக்கினர்.விசாரணை நடத்துவதற்காக பெரிய கேள்வி பட்டியலையே தயாரித்து வைத்திருந்தனர். கேள்வி கேட்கக் கேட்க, நித்யானந்தா புதுப் புது தகவலை கூறியதால், போலீசார் அதிர்ந்தனர்.நேற்று பிடதி ஆசிரமத்திற்கு சாமியாரை அழைத்துச் சென்ற போலீசார், அவர் முன்னிலையிலேயே அங்கு சோதனை மேற்கொண்டனர். முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய போலீசார், அது குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்து விட்டனர்.நித்யானந்தா, தன் மீதான வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி, கர்நாடகா ஐகோர்ட் டில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

நேசன்.

மருத்துவ கல்லூரி அனுமதிக்கு ரூ.2 கோடி லஞ்சம் ; தரம் காக்க வேண்டிய தலைமை பொறுப்பு கைது

Top world news stories and headlines detail

புதுடில்லி: மருத்துவ தரம் காக்க வேண்டிய தலைமையே தரம் தாழ்ந்து போனது. இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவர் கோடிக்கணக்கில் லஞ்சம் பெறும் போது லஞ்ச ஒழிப்பு மற்றும் சி.பி.ஐ., போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மருத்துவ தரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. மருத்துவம் தரம் காத்திட மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் தரம் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி துவங்குவதற்கு தரத்தின் அடிப்படையில் அனுமதி வழங்குவது,பட்டம் பதிவு செய்யும் அதிகாரம் , டாக்டர்களின் பதிவுச்சான்று உள்ளிட்ட மேலான பொறுப்பு கொண்டது.

இந்த அமைப்பின் பணி நாட்டின் நம்பிக்கைக்குரிய இடம் ஆகும். ஆனால் இங்கும் லஞ்சம் தலைவிரித்தாடியிருக்கிறது. சாதாரண ஊழியர் மட்டோடு லஞ்சம் இருந்திருந்தாலே யாராலும் ஏற்க முடியாது. ஆனால் தலைமை பொறுப்பில் இருக்கும் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவர் சிக்கியிருக்கிறார் என்பது தான் ஹைலைட்.

திடீரென போலீஸ் வந்தது : இங்கு தலைவராக இருப்பவர் கேதான் தேசாய். இந்த அமைப்பின் சர்வ அதிகாரமும் படைத்தவர். பஞ்சாப் மாநிலத்தில் தனியார் மருத்துவக்கல்லூரி துவங்குவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தவர்களிடம் ரூ . 2 கோடி கேட்டிருக்கிறார். பணம் தருவதாக ஒத்துக்கொண்ட இந்த தனியார் நிர்வாகத்தினர் , மத்திய குற்றப்புலனாய்வு ( சி.பி.ஐ) பிரிவினருக்கு தகவல் கொடுத்தனர். இங்கிருந்து தலைவரை பொறி வைத்து பிடிக்க திட்டமிடப்பட்டது. ரூ. 2 கோடி பணம் கைமாறும் போது போலீசார் கேதான் தேசாயை லபக் செய்தனர். திடீரென போலீஸ் வந்தது கண்டு அதிர்ச்சியுற்ற தேசாய் திரு, திருவென முழிக்க மட்டுமே முடிந்தது. மேலும் அவருடன் இருந்த அதிகாரி ஜே,பி., சிங் என்பவரும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து டில்லி, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட இது தொடர்பான அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது. மேலும் படிக்க…

செக்ஸ் சாமியார் நித்யானந்தா ஆசிரமத்தில் செக்ஸ் ஒப்பந்தம் போட்டு சீடர்கள் சேர்ப்பு !

Front page news and headlines today

பெங்களூரு: நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் சேரும் பக்தர்களிடம் ஒப்பந்த ஆவணத்தில் செக்ஸ் தொடர்பு கொள்ளவும் சம்மதம் தெரிவிக்கும் ஒரு காலமும் சேர்க்கப்பட்டுள்து. இதில் ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் செக்ஸ் உறவு வைத்து கொள்ளவும் சீடர்கள் தயாராக இருக்க வேண்டும். இது குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் நிபந்தனையுடன் கூடிய ஆவணப்பத்திரம் சி.ஐ.டி., போலீசாரிடம் சிக்கியுள்ளது. இதனால் இன்னும் திடுக்கிடும் மர்மத்தகவல்கள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இமாச்சலபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட செக்ஸ் சாமியார் நித்யானந்தா நேற்றிரவு பெங்களூரு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து ராம் நகர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். நடிகை ரஞ்சிதாவுடன், சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த காட்சிகள் வெளியானது. சாமியார் மீது லெனின் என்பவர், சென்னை போலீசில் புகார் கொடுத்தார். இதை வைத்து, சாமியார் நித்யானந்தா மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, கொலை மிரட்டல், சதி செய்தல் உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. பின்னர் இந்த வழக்குகள் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம் அர்கி என்ற இடத்தில் நித்யானந்தாவும், அவருடன் இருந்த சிலரும் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

செக்ஸ் சாமியார் நித்யானந்தா ஒப்பந்தம்.

{“ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் சீடர்களாக.. இருப்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ள நேரிடும். அதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்க கூடாது. செக்ஸ் உறவில் சம்பந்தப்பட்டவர்கள் அந்த விஷயத்தை வெளியே யாரிடமும் கூறக்கூடாது. நிர்வாணமும் உடலுறவும் ஆத்மாவின் விடுதலைக்கு அவசியம். யாரும் யாருடனும் உறவு வைத்துக்கொள்ளலாம். இதனால் சிலருக்கு உடல் அளவிலோ மனதளவிலோ சங்கடமாக இருந்தால் அதை தாங்கிக் கொள்ள வேண்டும் .}—-மேலும் படிக்க…