கர்நாடக மாநிலம் பிடதி என்ற இடத்தை தலைமை இடமாகக் கொண்டு உலகின் பல்வேறு இடங்களிலும் ஆசிரமங்கள் நடத்தி வந்தவர் பரமஹம்ச நித்யானந்தா. பிரமச்சர்யத்தை போதித்த நித்யானந்தா தன்னுடைய வசீகரமான பேச்சால் உலகம் முழுவதிலும் பக்தர்களை பெற்றவர்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 3 ம் தேதி அன்று தனியார் தொலைக் காட்சிகளில் நித்யானந்தா பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் ஒளி பரப்பப் பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்கள் அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கினர்.
அதன் பின் தலைமறைவான செக்ஸ் சாமியார் நித்யானந்தா அவ்வப்போது தன்னுடைய விளக்க விடியோவை தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட்டு வந்தார். சில தனியார் தொலைக் காட்சிகளுக்கும் பேட்டி அளித்து வந்தார். போலி சாமியார் நித்யானந்தாவுக்கு சேவை செய்த நடிகை ரஞ்சிதாவும் தலைமறைவானார்.
இந்நிலையில் கர்நாடக மாநில காவல்துறைக்கு சாமியார் நித்யானந்தா இமாச்சல பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக் வந்த தகவலை அடுத்து கர்நாடக காவல்துறை இமாச்சல பிரதேசத்துக்கு விரைந்தது. இமாச்சல பிரதேச காவல்துறையினரின் உதவியுடன் சோலன் என்ற இடத்தில் பதுங்கி இருந்த சாமியாரை காவல்துறை கைது செய்தனர். கைது செய்யப் படும் போது வேறு யாரும் அவருடன் இருந்தார்களா என்பது குறித்த தகவல்கள் கிடைக்க வில்லை.
சாமியாரை பெங்களூருக்கு கொண்டு வரும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பார்கள் எனத் தெரிகிறது. 50 நாட்களாக காவல்துறைக்கு தண்ணி காட்டிய நித்யானந்தாவை விசாரணை நடத்த ஏதுவாக காவல்துறையினர் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பார்கள் எனத் தெரிகிறது.
அவரிடம் நடத்தப் படும் விசாரணையில் நடிகை ரஞ்சிதா குறித்த மர்மம் விலகலாம் என்றும் எதிர் பார்க்கப் படுகிறது. சாமியார் நித்யானந்தா மீது அமெரிக்காவிலும் பாலியல் புகார் அளிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
Filed under: பொதுவானவை | Tagged: செக்ஸ் சாமியார் நித்தியானந்தா | Leave a comment »