Posted on ஏப்ரல் 19, 2010 by Nallur Peer

ஆசிரியர் U. R. ISMAVELAN.
அன்பான சகோதரர்களே
இறைவேதம் என்பது அனைவரும் படித்து அதன்படி ஒழுகுவதற்காக அருளப்பட்டதாகும் .பைபிள் கர்த்தரால் அருளப்பட்டதாக நீங்கள்நம்புகிறீர்கள் பைபிளை படிக்குமாறு உங்கள் பிரச்சார சபையினர் கூறுகின்றனர்.புனிதமானது என்றும் உயர்வானது என்றும் பிரச்சாரம் செய்கிறார்கல் பைபிளை படித்து பார்த்தால் அதில் ஏராளமான ஆபாசமான கதைகளும் நம்ப முடியாத கதைகளும் மலிந்து உள்ளன.சில உதாரணங்கள் மட்டும் இங்கு தரு கிறோம்.இதை படித்தாவது பைபிள் முழுவதும் இறைவாக்கல்ல என்று நம்புவீர்கள்
1 தந்தையும் ஹுமாரத்திகளும்
பின்பு லோத்து சோவாரியே குடியிருக்கப் பயந்து சோவரை விட்டு போய் அவனும் அவனோடே கூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள்.அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியுருந்தார்கள்.
அப்போது மூத்தவள் இளையவளைப் பார்த்து:நம்முடைய தகப்பன் முதிர் வயதானார்:பூமியெங்கும் நடக்கிற முறையின்படி நம்மோட சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை .மேலும் படிக்க..
Filed under: பொதுவானவை | Tagged: ஆபாசம்-நிறைந்த-பைபிள்-1 | Leave a comment »
Posted on ஏப்ரல் 19, 2010 by Nallur Peer

இந்தியாவை தாயகமாகக் கொண்ட பெருமைக்குரியவர் மதுபானத்தின் “லோகோ”வை தனது ஆடையில் அணிய மாட்டேன் என்ற அறிவிப்பின் மூலம் உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். அவர் பெயர் ஹாஷிம்ஆம்லா, கேசில் லேகர் என்ற மதுபான நிறுவனத்தின் லோகோவை அணிய மாட்டேன் என அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் தீமைகளி ன் தலையாய தீமையான மது பானத்திற்கு எதிரான போர்க்குரலை எழுப்பினார். இதன் மூலம் தனது தாய்நாடான இந்தியாவுக்கும், தன்னை வளர்த்த நாடான தென்னாப்பிரிக்காவுக்கும் பெருமை சேர்த்தார்.
ஹாஷிம் ஆம்லாவை பின்பற்றி, இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் யூசுப் பதானும் தன்னளவில் மதுபானத்திற்கு எதிரான போர்ப்பரணியை தொடங்கியிருக்கிறார்.
ஐ.பி.எல் ட்வென்டி&ட்வென்டி தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், அதிவேக சதமடிப்பதில் பேர் பெற்றவர். இவர் மதுபான விளம்பரங்களை தனது சட்டையில் அணிவதில்லை என்ற துணிச்சலான முடிவினை மேற்கொண்டிருக்கிறார்.
தனது ஆட்டங்களின் போது சட்டையில் இருந்த கிங்ஃபிஷர் நிறுவன லோகோவை துணியால் மறைந்து களமிறங்கினார். மதுபான தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் கிங்ஃபிஷர் நிறுவனம் கிரிக்கெட் விளையாட்டின் முக்கிய ஸ்பான்சராகவும், பெங்களூரு ராயல் சேலஞ்ச் அணியின் உரிமையாளராகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் யூசுப் பதானின் இம்முடிவை சமூகநல ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.
குஜராத் மாநிலம் பரோடாவில் உள்ள பள்ளிவாசலின், மோதினார் என அழைக்கப்படும் தொழுகை அழைப்பாளரின் மகனான இவர், மதுபான ஒழிப்புக்கு தனது செயலின் மூலம் அழைப்பு விடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
-அபூசாலிஹ்,tmmk.in
Filed under: பொதுவானவை | Tagged: மது-கொடுமைகளுக்கு-எதிரா | Leave a comment »
Posted on ஏப்ரல் 19, 2010 by Nallur Peer

பிரெஸிலியா, ஏப்.17: ஈரான் மீது புதிதாக பொருளாதார தடை விதிப்பது பிரச்னைக்குத் தீர்வாக அமையாது. இதை தூதரக நடவடிக்கைகள் மூலம்தான் தீர்க்க முடியும் என்றுபிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.பிரேஸில் தலைநகர் பிரெஸிலியாவில் நடைபெற்ற இரண்டாவது “பிரிக்’ நாடுகளின் கூட்டத்தில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலில் ஈரான் மீது தடை விதிக்கலாம் என்ற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் “பிரிக்’ நாடுகளின் கூட்டமைப்பில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஈரான் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், ரஷிய அதிபர் டிமித்ரி மெத்வதேவ், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, பிரேஸில் அதிபர் லூயி டி சில்வா ஆகியோரிடம் இந்த விஷயம் குறித்து விவாதித்தார். இந்த விஷயத்தில் நான்கு நாடுகளின் தலைவர்களின்கருத்துகளும் ஒரே மாதிரியாக இருந்தது. அனைத்துத் தலைவர்களுமே, பொருளாதார தடை மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வாக அமையாது என்று தெரிவித்தனர். இத்தகைய பொருளாதார தடை விதிப்பால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவர். அதேசமயம் வசதி படைத்தவர்கள் மத்தியில் இந்த தடைவிதிப்பு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.வெளிப்படையான, அதேசமயம் திறந்த மனதுடன் பேச்சு நடத்தப்பட வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.ஈரான் மீது தடை விதிப்பது தொடர்பாக இந்தியா தனது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெரிவித்து விட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு ஈரான் பயன்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது என்று மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக ஈரான் தெரிவித்து வருகிறது. ஆனால் உலக நாடுகளோ, அணுகுண்டு தயாரிப்புக்குத்தான் இதை ஈரான் பயன்படுத்துகிறது என சந்தேகிக்கின்றன. பொருளாதார தடை விதிப்பதன் மூலம் அந்நாடு அணுகுண்டு தயாரிப்பதை தடுத்து நிறுத்த முடியும் என உலக நாடுகள் கருதுகின்றன. ஆனால் புதிய பொருளாதார தடை விதிப்பை இந்தியா ஆதரிக்காது என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் மன்மோகன் சிங் தெளிவாகக் கூறிவிட்டார். புதிதாக விதிக்கப்படும் தடையில், நிதி புழக்கம் கட்டுப்படுத்தப்படுமே தவிர, பொருள்கள் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட மாட்டாது என்றே தோன்றுகிறது.ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பது தொடர்பான அறிக்கையை ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் கொண்டு வந்தது. இது தொடர்பான அறிக்கை தற்போது சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள 5 நிரந்தரஉறுப்பு நாடுகளின் பரிசீலனைக்கு விடப்பட்டுள்ளது.
dinamani.com
Filed under: பொதுவானவை | Tagged: உலகம்-ஈரான்-பிரச்னைக்கு | Leave a comment »
Posted on ஏப்ரல் 19, 2010 by Nallur Peer
பாஸ்வேர்ட் ஐ கணனிக்கு கொடுத்தபின் அதனை மறந்து அவதிபடுபவரா நீங்கள்? உங்களுக்காகவே மைக்ரோசொப்ட் தமது விண்டோ எக்ஸ்பியில் Password Reset Disk ஐ உருவாக்கும் வசதியை கொடுத்துள்ளது.இதனை எவ்வாறு உருவாக்குவது என பார்போம்.
* முதலில் start ஐ கிளிக் செய்து control panel ஐ தெரிவு செய்யவும்.*பின்னர் User Account பிரிவிற்கு சென்று உங்கள் Account இல் கிளிக் செய்யவும்.
* இப்போது ஓபன் ஆகும் விண்டோவில் இடது பக்கம் உள்ள சைட் பாரில் prevent a Forgotten Password என்று காணப்படும் பிரிவில் கிளிக் செய்யவும்.
* உடனே Forgotten password விசார்ட் கிடைக்கும். இனி உங்கள் பிளாஷ் டிரைவ் ஐ செருகவும். மேலும் படிக்க…
Filed under: பொதுவானவை | Tagged: Usb Drive ஐ பயன்படுத்தி | Leave a comment »