கொதிக்க கொதிக்க காய்ச்சி… குழந்தைங்க மேல ஊத்தி.. ‘வீல்’ பாயசம்!

post thumbnailபக்தி என்ற பெயரில் உ.பி-யில் கடந்த 4-ம் தேதி நடந்த இந்த காட்டுமிராண்டித்தனம், வட இந்தியாவை அதிர வைத்துள்ளது! உத்தரப் பிரதேசத்தின் தெய்வீக நகரமான காசி என்கிற வாரணாசியில்தான் அந்த கொடூரம். அன்றைய தினம் மதியம், நகரின் இதயப் பகுதியான சோக்கில் உள்ள அகர்சன் மஹாஜனி மஹா

வித்தியாலயா எனும் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தம் குடும்பத்தினருடன் கூடியிருந்தனர். கூட்டத்தின் நடுவே 18 அடுப்புகளை வரிசையாக மூட்டி அதன் மீது வைக்கப்பட்டிருந்த பானைகளில் அரிசி, சர்க்கரை மற்றும் பாலுடன் சேர்த்து பாயசம் கொதித்துக் கொண்டிருந்தது. கொதி பானைகளுக்கு முன் ‘ஜெய் ஷீத்லூ மாதா!’ என்றும் ‘ஷீத்லூ மாதா கி ஜெய் ஹோ!’ என்றும் கோஷமிட்டார் நின்றிருந்த பூசாரி கோவிந்த் பகத். கூட்டத்தினர் அவருக்கு சாமந்திப்பூ மாலைகளை அணிவித்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு இருந் தனர். இதன் பேக்ரவுண்ட் மியூசிக்காக உடுக்கை மேளம் முழங்க… அதன் பிறகு, அங்கு பார்ப்பவர் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் கொடூரம் அரங்கேறியது. தன் 6 மாதப் பச்சிளங் குழந்தையை ஒரு தாய் பக்தியுடன் பூசாரியிடம்


கொடுத்தார்.மேலும் படிக்க..

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: பாதுகாப்பு இல்லாத பாதுகாப்புத்துறை!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 80 சி.ஆர்.பி.எஃப். படையினர் கொல் லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தியும் மற்றும் சுற்றிவளைத்து சரமாரியாக சுட்டும் கொன்று குவித்துள்ளனர்.

நக்சலைட்டுகளின் 43 ஆண்டு கால வரலாற்றில் இது படுபயங்கர தாக்குதலாக கருதப்படுகிறது.

8 மாநிலங்கள், 200 மாவட்டங்கள் என நக்சலைட்டுகளின் ஆதிக்கம் வனப்பகுதிகளில் கொடி கட்டிப் பறக்கிறது.

மாவோயிஸ்ட்டுகளின் செயல் பாட்டினை ஒடுக்க கிரீன் ஹன்ட் என்ற பெயரில் மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து தாக்குதல் நடத்தின. அந்த தாக்குதல் நடவடிக்கையினைக் கண்டித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு நக்சல்கள் ஏழு மாநிலங்களில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தி னர். அதற்கு ஓரளவு ஆதரவும் கிடைத்தது கவலைக்குரிய ஒன்றாக கருதப்பட்டது.

நக்சல் தாக்குதலின்போது மலைபதுங்கு இடங்களில்  இருந்து, கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நக்ச லைட்டுகளின் தாக்குதலின் போது சி.ஆர்.பி. எஃப். படையினர் பலர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

150க்கும் மேற்பட்டோர் இன்ன மும் காணவில்லை. கொடூர மான தாக்குதலின் போது தப்பிஓடி விட்டார்களா? அல்லது மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப் பட்டார்களா? என்ற விபரம் இன்னமும் கிடைக்கவில்லை என பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவோயிஸ்ட்டுகளைத் தேடும் வேட்டையோடு, காணாமல் போன பாதுகாப்புப்படையினரையும் தேட வேண்டிய கூடுதல் சுமை இப்போது அதிகரித்துள்ளது.

மறைந்திருந்து தாக்கும் நக்சல்கள் கோழைகள், அவர்கள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் துடைத்தெறியப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பகிரங்கமாக சூளுரைத்த மூன்றா வது நாளில் இந்தக் கொடூர தாக்குதலை நக்சலைட்டுகள் நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க…

தமிழ்நாடு அரசின் சின்னமாக ஏன் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைய கூடாது?

இந்தியா மதசார்பற்ற நாடு. குறிப்பாக தமிழகம் சமயசார்பற்ற, அமைதி பூத்துக் குலுங்கும் சமதர்மபூமி. பெரியார், அண்ணா, காயிதே மில்லத் போன்ற பெருந்தகைகளால் பக்குவப் படுத்தப்பட்ட மண் இது.

ஆனால் தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம் கடந்த அரை நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருகிறது. அது எந்த ஊர் கோவில் என்பதே பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது. அந்த கோபுரம் உண்மையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர கோவில் கோபுரமாகும். தமிழகத்தில் ஸ்ரீவில்லிப் புத்தூரில் மட்டும்தான் கோவில் உள்ளதா?

1000 ஆண்டுகால பழமை கொண்ட தஞ்சாவூர் பெரிய கோவில், கட்டிடக்கலையில் சிறப்பிடம் பெற்ற மதுரைக்கோவில், ஸ்ரீரங்கம் கோவில் போன்றவைகள் இடம்பெறாமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரம் இடம்பெற்றதற்காக நாம் காரணங்கள் தேடி அலைய வேண்டியதில்லை. ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த குமாரசாமி ராஜா தமிழக முதலமைச்சராக இருந்துபோது தனது ஊரின் கோவிலை அரசு சின்னமாக அறிவித்து விட்டார். அவ்வளவுதான். ஆனால் தமிழக, அரசின் முக்கிய ஆவணங்களில், கோப்புகளில் கோபுரம் இடம்பெறுவது நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் நெருடலையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியிருப்பது உண்மை.

மேலும் படிக்க…