11 வயது சிறுமியை 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் பலாத்காரம் செய்து கொன்ற அதிர்ச்சியளிக்கும் சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக மாணவனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் டவுன் காவல்துறை சரகம் பெரியமறவன் குளத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் 11 வயது மகள் அருணா, கடந்த 3-ந்தேதி குப்பை மேட்டில் பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெரியமறவன் குளத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் பாலசந்தர்(16) என்பவர்தான் அருணாவைக் கொலை செய்தது உறுதியானது. காவல்துறைனர் தன்னைத் தேடுவதை அறிந்த பாலச்சந்தர் திருமங்கலம் துணை தாசில்தாரிடம் சரண் அடைந்தார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட பாலசந்தர், சிறுமையை எவ்வாறு கொன்றார் என்பதை வாக்குமூலமாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
அதில், “கடந்த சனிக்கிழமை இரவு பெரியமறவன் குளத்தில் கோவில் விழாவையொட்டி நாடகம் நடந்தது. நாடகம் பார்த்துவிட்டு அருணா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். அவளை அப்பகுதியில் உள்ள வயல் காட்டுக்குக் கடத்திச் சென்றேன்.
அங்கு பலாத்காரம் செய்தேன். இதில் அருணா மயங்கி விட்டாள். பயந்துபோன நான் விசயத்தை வெளியே சொல்லி விடுவாளோ? என கருதி அங்கு கிடந்த மின் வடத்தால் அருணாவைக் கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் பிணத்தை அங்கு உள்ள குப்பை மேட்டில் வீசி விட்டு தலை மறைவானேன். காவல்துறையினர் என்னைத் தேடுவதை அறிந்து சரண் அடைந்தேன்” என்று கூறியுள்ளார்.
சிறுமியைப் பள்ளி மாணவன் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
inneram.com
Filed under: பொதுவானவை | Tagged: 11-வயது-சிறுமியைப்-பலாத்கா | Leave a comment »