வளைகுடா நாடுகளிலேயே உலகப் பொதுவர் மாநகர் (Cosmpolitan city) என்று பெயர் எடுத்த துபையில் ஒழுக்க கேடுகளான செயல்கள் தற்போது இரும்புக் கரம் நீட்டி தடுக்கப்பட்டு வருகின்றன.
இரு நுற்றாண்டு காலம் சிறப்பு கொண்ட துபை தனித்துவமிக்க கலாச்சார, பாரம்பரியம் கொண்ட நகரமாக இருந்த வேளையில் கடந்த 50 ஆண்டுகளாக உலக வணிக வர்த்தக சந்தையாக முன்னேறிய வேளையில் அமெரிக்க, ஐரோப்பியா, ரஷ்யா போன்ற நாடுகளின் வர்த்தக மற்றும் சுற்றுலாத் தொடர்புகளால் உள்ளூர் கலாசாரத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உலக பொதுவர் மாநகரமாக பரிமாற்றம் கண்டது. ஆனால் அந்தத் தொடர்பு ஒழுக்க கேடுகளான மாற்றங்களை கொள்ளாத வகையில் தற்போது இரும்புக் கரம் நீட்டப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக் கிழமை (04-04-2010) அன்று பொது இடத்தில் மதுஅருந்தி கட்டியணைத்து முத்தமிட்ட பிரிட்டன் ஜோடியை ஒரு மாதம் சிறையில் அடைத்து தண்டனை வழங்கியுள்ளது துபை நீதிமன்றம். உணவகம் ஒன்றில் கட்டியணைத்து முத்தமிட்ட இந்த 20 வயது ஜோடி, குழந்தைகளுடன் அங்கு உணவருந்திய அரபுத் தாய் ஒருவர் கண்டித்ததின் தொடர்பில் ஏற்பட்ட நடவடிக்கையில் நீதிமன்றம் அந்த பிரிட்டன் ஜோடிக்கு இந்த தன்டைனையை வழங்கியுள்ளது.
மேலும் சென்ற மாதம் ஆபாச குறுந்தகவல் பரிவர்த்தனை செய்த இந்திய ஜோடி ஒன்றுக்கும் மூன்று மாதம் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல அங்கு புகழ்பெற்ற ‘ஜுமைரா’ எனும் கடற்கரை பூங்காவில் உடலறுவு கொண்ட பிரிட்டன் ஜோடியை மூன்று மாதம் சிறையில் அடைத்து, அவர்களது ‘வீசா’வினை ‘கேன்சல்’ செய்து நாட்டை விட்டு வெளியேற்றியது.
எல்லாவற்றையும்விட மேலாக பிரிட்டன் பெண் ஒருவர் குடித்து விட்டு யாரிடம் உடலுறவு கொண்டோம் எனத் தெரியாத சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். விடுமுறையில் துபை வந்த அவர் ஓட்டல் ஒன்றில் குடித்துவிட்டு அடுத்த நாள் தன்னை ஓட்டல் ஊழியர் ஒருவர் கழிவறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையினரிடம் புகார் செய்தார். ஆனால் ஓட்டல் நிர்வாகம் இதை மறுத்தது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் அந்தப் பெண்ணிடம் உடலியல் சோதனை செய்ததில் அவர் மது அருந்திய பின்பு தனது காதலருடன் விருப்பப்பட்டே உடலுறவு கொண்டுள்ளார் என்பதும் அவர் போதையில் இருந்ததால் யாருடன் உடலுறவு கொண்டோம் என்பதும், இரவில் என்ன நடந்தது என்றும் தெரிந்திருக்கவில்லை என்றும் மேலும், அவர் திருமணம் ஆகாமலே உடலுறவு கொண்டதற்காகவும், தவறாக புகார் அளித்தற்காகவும் அவர் சிறையில் தள்ளப்பட்டார்.
Abdul Kader.
Filed under: பொதுவானவை | Tagged: கள்ள-பாலியல்-உறவு-மது-அரு | Leave a comment »