கூகிள் பற்றிய முன்னுரை கொடுக்கக்கூடிய அளவில் கூகிள் இல்லை என்பதால் நேராக விசயத்திற்கு வருகிறேன். கூகிள் பல பல புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது. அதில் சமீபத்திய அறிமுகமான Google Buzz பற்றிய செய்திகள் மற்றும் என் பார்வை தான் இந்த இடுகை.

கூகிள் மின்னஞ்சலை துவங்கிய போது இருந்தே திறமையான ஒரு மார்க்கெட்டிங் முறையை பயன்படுத்தி வருகிறது, அதாவது அழைப்பு இருந்தால் மட்டுமே முதலில் பயன்படுத்த முடியும். கூகிள் மின்னஞ்சல் துவங்கப்பட்ட போது அழைப்புக்காக மற்றவர்களிடம் வேண்டியவர்கள் அதிகம், இவ்வாறு இதன் மீதான எதிர்பார்ப்பை கூட்டி விடுகிறது. அதே போல Google Buzz க்கும் இதே போல எடுத்தவுடன் அனைவருக்கும் இந்த வசதியை கொடுத்து விடவில்லை , சிலருக்கு கொஞ்சம் காக்க வைத்து கொடுத்தது. ஃபிகர் உடனே பிக்கப் ஆனா ஒரு த்ரில் இருக்காது அது மாதிரி தான் 😉
Google Buzz பயன் என்ன?
நம்மோட எண்ணங்களை நம்மை பற்றிய செய்திகளை நம் நண்பர்களுடன் எளிதாக பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு இடம். இங்கே எதை வேண்டும் என்றாலும் பகிர்ந்து கொள்ளலாம் படங்கள் வீடியோ உட்பட, அதற்க்கு நம்மை பின் தொடர்பவர்கள் அதில் தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்வார்கள். உலகில் நடக்கும் அனைத்து செய்திகளையும் இதில் நாம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். ஒரு சிலர் காஃபி, சாப்பாடு சாப்பிட்டேன், தூங்கிட்டு இருந்தேன் என்கிற அளவில் அனைத்தையும் எழுதிக் கொண்டுள்ளார்கள்.
Google Buzz பற்றிய சில செய்திகள்
Google Buzz முதலில் துவங்கிய போது ஒருவர் அதிகளவில் தொடர்பில் உள்ளவர்கள் (மின்னஞ்சல் மற்றும் உரையாடி[chat]) மின்னஞ்சல் முகவரிகளை அதுவே பின்தொடருபவராக ஏற்படுத்தி விட்டது. இதற்கு அனைவரிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதெப்படி என்னோட அனுமதி இல்லாமல் இதை நீங்கள் செய்யலாம்? என்று. கூகிள் எப்போதும் ஒன்றை துவங்கியவுடன் அதோடு நின்றுவிடுவதில்லை அதில் குறைகளை கேட்டு அதை உடனுக்குடன் நிவர்த்தி செய்து விடுகிறது. இதையும் காலம் தாழ்த்தாமல் இரண்டே நாட்களில் சரி செய்தது. மேலும் படிக்க…
Filed under: பொதுவானவை | Tagged: google-buzz-பற்றிய-ஒரு-பார்வை | Leave a comment »