![]() இவர் யார்? இந்தப் படத்தின் பின்னணி என்ன? என்பனவற்றை விரிவாக அலசி ‘உயிர்மை’ இதழில் ஒவ்வொரு இந்தியரும் அறிய வேண்டிய ஓர் ஆக்கம் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் கெ. மோகன்லால் நேர்கண்டு எழுதியதைத் தமிழில் ஸ்ரீபதி பத்மநாமா வழங்கியுள்ளார். அவர்கள் அனைவருக்கும் நமது உளமார்ந்த நன்றிகள்! – சத்தியமார்க்கம்.காம் |
“நான், குத்புதீன் அன்சாரி! சமீபத்தில் ஓர் அடையாளச் சின்னமாக ஆனேன் –
டெல்லிக்கு இந்தியா கேட் போல; ஜெய்ப்பூருக்கு ஹவா மஹால் போல; கொல்கத்தாவுக்கு ஹவுரா பாலம் போல; மும்பைக்கு கேட் வே ஆஃப் இந்தியா போல; அகமதாபாதுக்கு ஓர் அடையாளச் சின்னம் இருக்கவில்லை. அடையாளச் சின்னம் இல்லாத நகரங்களுக்கு முகம் இல்லை. தனிப்பட்டுத் தெரிய ஓர் அடையாளமில்லாமல் அகமதாபாத் இருந்தபோதுதான், நான் அந்தக் குறையை நீக்கினேன். நுரைக்கின்ற கண்ணீரும் பத்திரிகைக் காகிதத்தில் உறைந்துவிட்ட என் அலறலும் கை கூப்பியடி நிற்கும் என் கெஞ்சலும் நெருங்கிவிட்ட மரணத்தை உங்களுக்குக் காட்டின. நான் அகமதாபாத்தின் அடையாளச் சின்னமானேன்.” மேலும் படிக்க…
Filed under: பொதுவானவை | Tagged: ஒரே ஒரு நிழற்படம் | Leave a comment »