
சென்னை : ”பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் நடந்த தமிழ் முதல்தாள் தேர்வில் கேள்வித்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். அப்பாடத்தில் அவர்கள் தோல்வி அடையாத வகையில், தேர்வுத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்,” என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி உறுதி அளித்துள்ளார். குளறுபடி நடந்த இடங்களில் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், ஆசிரியர்களை, இனி தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என்றும், அரசு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, நேற்று முன்தினம் துவங்கியது. எஸ்.எஸ்.எல்.சி., – மெட்ரிக் – ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியன்டல் ஆகிய நான்கு போர்டு மாணவர்களும் கலந்து ஒரு அறையில் தேர்வெழுத வைக்கப்பட்டனர். முதல் நாள், தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது. காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளியில மேலும் படிக்க…
Filed under: பொதுவானவை | Tagged: வினாத்தாள் மாறிய மாணவர்களுக்கு |
மறுமொழியொன்றை இடுங்கள்