மாதுளம் பழம்
உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதில் மாதுளம் பழம் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை பல்வேறு நாளிதழ்களும், மருத்துவ இதழ்களும் வெளியிட்டு மாதுளம் பழத்தின் புகழை மேலும் பிரபலப்படுத்தி விட்டன.
கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தரும் மாதுளம் பழத்தின் அளவிடற்கரிய சத்துகளையும், மருத்துவ பலன்களையும் சொல்லி மாளாது. தற்போது ஹோட்டல்கள், ஜூஸ் கடைகள், விருந்து-விழா நிகழ்ச்சிகள் என எல்லா இடங்களிலும் மாதுளம் பழ ஜூஸ்-க்கு தனியிடம் கிடைத்துள்ளது.
உணவுத் துறையில் தற்போது மாதுளம் பழத்தை `சூப்பர் புரூட்’ என அழைக்கிறார்கள். ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது.
முன்கூட்டியே வயோதிகம் ஏற்படுவதையும் மாதுளம் பழம் தடுக்கிறது. உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் இதன் மருத்துவ குணம் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுகிறது.
அன்றாடம் மாதுளம் பழ ஜூஸ் அருந்தி வர, ஆண்களுக்கான ஆக்ஸிஜனேற்றத்தை அது சீராக்கும் என்றும், பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்று நோயை உருவாக்கும் செல்களை மாதுளம் பழம் அழிக்கும் தன்மை கொண்டது என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும் சிறுநீர்ப் பையை சுற்றியுள்ள ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது
சிகப்புத் திராட்சை
சிவப்புத் திராட்சை உண்பது உயர் குருதி அழுத்தம், கொழுப்புப் பாதிப்புகள், இதய நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் என்னும் இனிப்பான ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர் யூ.கே ஆராய்ச்சியாளர்கள்.
சிவப்புத் திராட்சையில் அதிக நார்சத்து மற்றும் விஷத்தன்மையை எதிர்க்கும் பொருட்கள் அதிகம் இருப்பதாகவும் இது உடலை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது எனவும் இந்த ஆராய்ச்சி விளக்குகிறது.
உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பைக் குறிப்பதன் மூலமாக இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இதய நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும் வலிமை இந்த சிவப்புத் திராட்சைக்கு இருக்கிறதாம்.
ஒரு எச்சரிக்கை
சமீபத்தில் பழச்சாறுகள் தொடர்பாக வெளியான ஒரு ஆராய்ச்சி அதிர்ச்சியூட்டுகிறது.
அதாவது பழச்சாறுகள் நாம் அருந்தும் மருந்தின் வீரியத்தைக் குறைத்து நோயிலிருந்து சுகம் பெறுவதில் சிக்கலை உருவாக்குமாம். குறிப்பாக இதய நோய், குருதி அழுத்தம் போன்ற நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்தின் வீரியத்தை இந்த பழச்சாறுகள் தடுக்கின்றனவாம்.
மருந்து மாத்திரைகள் உட்கொள்ளும்போது வெறும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் எனவும், பழச்சாறுகள் பயன்படுத்தக் கூடாது எனவும் ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன. இப்போது பழச்சாறு அருந்துவது மருந்தையே செயலற்றதாக்கிவிடும் எனும் செய்தி கூடுதல் கலவரமூட்டுகிறது
நன்றி:feroos.blogspot.com
Filed under: மருத்துவ செய்தி | Tagged: மருத்துவ குணம் நிறைந்த |
very very good information thanks