
மும்பை, மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே மீது 73 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 6 வழக்குகளில் அவர் ஜாமீன் பெற்றுள்ளார் என போலீஸôர் தெரிவித்தனர்.மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியிலிருந்து பிரிந்து மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா என்ற புதிய கட்சியை ராஜ் தாக்கரே தொடங்கினார்.மும்பை மராத்தியர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும், வட இந்தியர்கள் மராத்தியர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும் கூறி, அவர்கள் மீது எம்.என்.எஸ். அமைப்பினர் கடந்த வருடம் மும்பையில் தாக்குதல்களில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே போலீஸôரால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரம் முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. இந்தக் கலவரங்கள் அனைத்தும் ராஜ் தாக்கரேவின் தூண்டுதலின் பேரில் நடைபெற்றதாக அவர் மீது 73 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இவற்றில் 6 வழக்குகளில் ஜாமீன் தரப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் அனைத்தையும் தாக்கரே சந்திக்க வேண்டியுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்தன. இந்த வழக்குகளில் தாக்கரேவுக்கு ஆதரவாக பிரபல குற்றவியல் வழக்கறிஞர் சாயாஜி நாங்ரே ஆஜராக உள்ளார்.
நன்றி:dinamani.com
Filed under: பொதுவானவை | Tagged: ராஜ் தாக்கரே மீது | Leave a comment »