சாமியார் தொழிலை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும்


புழுத்துக் கிளம்பும் சாமியார்கள்!

கடந்த 10 ஆண்டு காலமாக விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு 2000 கோடி ரூபாய் கொள்ளையடித்த சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்ட சேதி ஏடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது; ஊடகங்களுக்கும் பெரும் தீனியாகவும் கிடைத்துவிட்டது.

இவ்வளவுக்கும் இந்த ஆசாமியின் பூர்வாங்கத்தை அறிந்தால், எவ்வளவு அடிமட்டத்து ஆசாமியும் சாமியார் வேடம் போட்டால் மிகப் பெரிய ஆளாக பெருந் தனவந்தராக, அரசியலில் செல்வாக்கு மிக்கவராக, பெரிய பெரிய மனிதர்களின் தோள்களில் கைபோட்டுப் பேசும் கூட்டாளியாக இமய மலைக்கு மேலே உயரமாக உட்காரலாம் என்பது அறியப்பட்டு விட்டது.

1988 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் என்ற இடத்தில் இருந்து பிழைப்புத் தேடி டெல்லி வந்து, உணவு விடுதியில் எடுபிடியாக, இரவுக் காவலாளியாக இருந்தவர்தான்; இரண்டுமுறை திருட்டு வழக்கிலும், விபச்சார வழக்கிலும் சிக்கி சிறைத் தண்டனையையும் அனுபவித்த இந்தக் கில்லாடி கடைசியில் தொடங்கியதுதான் இந்த சாமியார் தொழில்.

இது ஒன்றுதான் முதலில்லாத தொழில் மக்களை பக்தியின் பெயரால் மதி மயங்க வைத்து, தாம் விரிக்கும் வலையில் விழ வைக்கும் தொழில். அதுவும் பகவான் சாய்பாபாவின் சீடன் என்று சொல்லிக் கொண்டால் கேட்கவும் வேண்டுமா? அடுத்து கோயில் கட்டவேண்டியதுதானே. கோயில் கட்டுவது என்றால் கண்களை மூடிக்கொண்டு பணத்தைக் கொட்டுவார்களே! ஷிவ் முராத் திவிவேதி என்கிறபோது இவர் ஒரு பார்ப்பனர் என்பதும் வெளிச்சமாகிறது. தந்திரங்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?

இவ்வளவு வேடம் போட்டால் பக்த கோடிகள் பெருகிவிடுவார்களே! அதன்பின் சாமியார் செல்வாக்கு கூடுமே! நமது மந்திரிமார்களுக்கு ஆஸ்தான ஜோதிடர், ஆஸ்தான சாமியார்கள் உண்டல்லவா! ஒரு சந்திரா சாமியார் இந்திய அரசியலில் எவ்வளவு பெரிய வேலைகளையெல்லாம் செய்தார்? ஆயுத வியாபாரியாக எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தார்!

இவற்றையெல்லாம் கண்ணுக்கெதிரே பார்க்கிற ஆசாமிகள், சபாஷ், இதுதான் சரியான தொழில் குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்று வாயில் எச்சில் ஊறுகிறது.

விமானப் பணிப்பெண்களை உள்பட விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி, ஒரு விபச்சார சாம்ராஜ்யத்தையே அல்லவா நடத்தியிருக்கிறான்?

இவன் பின்னணியில் பிரபல அரசியல்வாதிகள் எல்லாம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வருவார்களா அல்லது அந்த செல்வாக்குப் பெற்ற அரசியல்வாதிகளைப் பயன்படுத்தி இந்தக் குற்றங்களிலிருந்து இந்த சாமியார் வெளியில் வருவாரா என்பதுதான் கேள்விக்குறி.

திருவண்ணாமலைக்கு பிச்சைப் பார்ப்பானாக ஓடி வந்த வெங்கட்ரமணன் இந்த நாட்டில் ரமண ரிஷியாகி, கோடிக்கணக்கில் சேர்த்த சொத்துகளை சகோதரனுக்கு எழுதி வைக்கவில்லையா?

சந்நியாசிக்கு வாரிசு ஏது என்று நீதி மன்றம் கேட்ட கேள்விக்கு, நான் சந்நியாசம் வாங்க வில்லையே! என்று அந்தர்பல்டி அடிக்கவில்லையா?

லோகக் குரு என்று சொல்லப்பட்ட காஞ்சிபுரத்து ஆசாமி ஒருவர் கொலை வழக்கில் சிக்கவில்லையா? பெண்கள் விஷயத்தில் ஆகட்டும் எவ்வளவு அசிங்கம்!

ஆனாலும் அந்த ஆசாமி பெரிய மனுஷராக பவள விழா கொண்டாடிக் கொண்டு வீதி உலா வந்து கொண்டுதானே இருக்கிறார்?

சாமியார் தொழிலை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு சாமியாரையும் விசாரணைக்கு உட்படுத்தி குற்றங்களின் அடிப்படையில் கடும் தண்டனையைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் ரமணரிஷிகளும், ஜெயேந்திரர்களும், ஷிவ் முராத் திவிவேதிகளும் நாளும் புழுத்துக் கொண்டு தானிருப்பார்கள், எச்சரிக்கை!

நன்றி:thamizhoviya.blogspot.com

சாமியார் நித்தியானந்தமும், நடிகை ரஞ்சிதாவும் உல்லாசமாக இருக்கும் காட்சி: தமிழகம் முழுவதும் பரபரப்பு

பிரபல சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் ஒரு அறையில் உள்ளனர். அது ஆசிரமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை ர
ஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது ரஞ்சிதா மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.

திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகரன் என்ற நித்தியானந்த சாமியார், திருவண்ணாமலை, பெங்களூர் போன்ற இடங்களில் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகள் இவரது ஆசிரமத்துக்கு சென்று வரும் பக்தர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:இந்நேரம்.காம்

கோவில் சுரங்க அறையில் விபசாரம் நடத்திய சாமியார் கைது

டெல்லி: சத்ய சாய்பாபாவின் சீடர் என்று தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் சிவ்முரத் திவேதி (39). இவர் கான்பூரில் சாய்பாபா பெயரில் பெரிய கோவில் கட்டி உள்ளார். அக்கோவிலில் தினமும் பஜனைப் பாடல்களை பாடியும் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதும் வழக்கம். டெல்லியில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர் மேலும் இவருக்கு டெல்லியில் உள்ள அரசியல்வாதிகளிடமும் பழக்கம் ஏற்பட்டதால் அவர் டெல்லியில் புகழ் மிக்க சாமியாராக வலம் வந்தார்.

இந்நிலையில் சாமியார் சிவ்முரத் திவேதி இந்து மதத்தை கேடயமாக வைத்துக் கொண்டு விபசாரம் செய்து வருவதாக புகார்கள் வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த டெல்லி போலீசார் சிவ்முரத் திவேதி யையும் அவரது கோவில், வீடுகளையும் கண்காணித்தனர். போலீஸ் விசாரணையில் கான்பூர் சாய்பாபா கோவிலில் சுரங்க அறைகள் இருப்பதும் அங்கு விபசாரம் நடப்பதும் உறுதியாக தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் சிவ்முரத் திவேதியின் கோவிலில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு விபசாரம் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.

இதனை தொடர்ந்து உடனடியாக போலி சாமியார் சிவ்முரத் திவேதி கைது செய்யப்பட்டார். அவருடன் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த 2 விமானப்பணிப் பெண்கள், கல்லூரி மாணவிகள் 2 பேர் பிடிபட்டனர்.  இந்தி படங்களில் நடித்து வரும் துணை நடிகை ஒரு வரும் இந்த வேட்டையில் சிக்கினார். மேலும் டெல்லியில் உள்ள பணக்காரர்களின் வீடுகளுக்கு செல்ல தயாராக இருந்த இளம் பெண்களும் போலீசாரிடம் பிடிபட்டனர்.

போலி சாமியாரின் பாபா கோவில் முழுக்க போலீசார் சோதனை நடத்தி னார்கள். அப்போது 5 டைரிகள் கிடைத்தன. அந்த டைரிகளில் இந்தியா முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பெண்களின் முகவரிகள், போன் நம்பர்கள் இருந்தன.  அவர்கள் அனைவரையும் போலி சாமியார் சிவ்முரத் திவேதி விபசாரத்தில் ஈடு படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் போலி சாமியாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நன்றி:இந்நேரம்.காம்