துபாய்: மரண தண்டனையை எதிர்நோக்கும் 12 இந்தியர்கள்!

மதுக் கடத்தல், போட்டிக் குழுவைச் சேர்ந்த இருவரை கடத்திச் சித்திரவதை செய்து, ஓரினச் சேர்க்கை கொடுமையைச் செய்து, உயிரோடு புதைத்துக் கொலை செய்தது ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள 12 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தான் நாட்டவருக்கு மரண தண்டனை கிடைக்கும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த 13 பேரும் சேர்ந்து மதுக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போட்டி குழுவைச் சேர்ந்த இருவரைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு, உயிரோடு வைத்து இருவரையும் புதைத்துக் கொன்று விட்டனர்.

13 பேரும் கைது செய்யப்பட்டு துபாய் [^] கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின்போது தங்கள் மீதான குற்றச்சாட்டை இவர்கள் 13 பேரும் மறுத்துள்ளனர்.

நேற்று இவர்கள் மீது கடத்தல், கொலை மற்றும் உடல்களை மறைத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டனர். 5 பேர் மீது செக்ஸ் சித்திரவதை குற்றச்சாட்டுப் பதிவானது. 10 பேர் குடிபோதையில் இருந்ததாக ஒரு குற்றச்சாட்டுப் பதிவானது.

கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி இந்த 13 பேரும் சேர்ந்து அபு பக்கர் நுஜிலா என்பவரையும், இன்னொருவரையும் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் அவர்களை இரும்புக் குழாய்கள், குச்சிகள், கத்திகள் ஆகியவற்றை வைத்து தாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.

13 பேரில் 5 பேர் அந்த இருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். பின்னர் அந்த இருவரையும் ஒரு இடத்தில் குழி தோண்டி உயிரோடு புதைத்து மேலே மண்ணைப் போட்டு மூடி விட்டனர்.

இந்த 13 பேரும் கடந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 13 பேருக்கும் மரண தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.

12 இந்தியர்களில் 3 பேர் கொத்தனார்கள் ஆவர். ஒருவர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். 8 பேர் வேலையில்லாமல் இருந்தவர்கள் ஆவர். கைதான பாகிஸ்தான் நபர் டிரைவர் ஆவார். அனைவரும் 21 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் ஆவர்.

கைதான இந்தியர்கள் 12 பேரும் எந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

நன்றி: kadayanallur.org

நாகூர் கந்தூரியும் நாசமாகும் அமல்கள்

தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரி மாதக் கணக்கை நன்கு நினைவு வைத்திருப்பர். ஆனால் அவர்களுக்கு அரபு மாதங்களின் பெயர்கள் தெரியாது. இதற்குக் காரணம் அவர்கள் அந்தந்த மாதத்தில் நடக்கும் அவ்லியாக்களின் கந்தூரிகளை வைத்து மாதத்தைக் கணக்கிடுவது தான்.

ரசூலுல்லாஹ் மவ்லிது (ரபிய்யுல் அவ்வல்), முஹ்யித்தீன் மவ்லிது (ரபிய்யுல் ஆகிர்), பஷீரப்பா கந்தூரி (ஜமாதில் அவ்வல்), ஷாகுல் ஹமீது மவ்லிது (ஜமாதில் ஆகிர்), காஜா நாயகம் மவ்லிது (ரஜப் மாதம்) என அவ்லியாக்களின் பெயரிலேயே மாதப் பிறையைக் கணக்கு வைத்திருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு அவ்லியாக்களின் கந்தூரிகள் அவர்களை ஆக்கிரமித்து நிற்கின்றன.

ஜமாதில் ஆகிர் மாதம் பிறக்கவிருக்கின்றது. பெண்கள் கணக்குப்படி ஷாகுல் ஹமீது மவ்லிதுப் பிறை, நாகூர் கந்தூரிப் பிறை பிறக்கவிருக்கின்றது.
பிறை 1 முதல் 14 நாட்கள் நடக்கும் இந்தக் கந்தூரி நாகூரில் படு விமரிசையாக நடைபெறும்.

நாகூர் செல்ல முடியாதவர்களுக்காக ஷாகுல் ஹமீது தர்காவின் கிளைகளும் சில ஊர்களில் உண்டு. அந்தக் கிளைகளில் அவர்கள் கந்தூரிகளைக் கொண்டாடி தங்கள் பக்திகளை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.

இக்கந்தூரியில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத்திலிருந்து மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் கூட பக்தர்கள் வந்து நாகூர் சன்னதியில் குழுமுவார்கள்.

இப்படி இவர்கள் வந்து நாகூரில் குழுமுவதன், கூடுவதன் நோக்கம் என்ன? “இவையெல்லாம் அவ்லியாக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுத் தரும். இவை அல்லாஹ்விடம் நெருக்கி வைக்கும் காரியங்கள்” இது தான் இவர்களது எண்ணம். அதற்காகத் தான் இத்தனை பெரிய பயணம், செலவுகள், 14 நாட்களுக்கு மேற்கொள்ளும் சிரமங்கள்.

நாம் இங்கே பார்க்கப் போவது இவர்கள் செய்கின்ற இந்தக் காரியங்கள் இவர்களுக்கு எள் அளவாவது, எள் முனையளவாவது பயனளிக்குமா? என்பதைத் தான்.

இந்தக் கேள்விக்கு, நன்மையையும் தீமையையும் பிரித்துக் காட்ட வந்த அல்குர்ஆன் அளிக்கும் பதிலைப் பார்ப்போம்.
என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.
அல்குர்ஆன் 18:102

இந்த வசனத்தில் இவர்களை இறை மறுப்பாளர்கள் என்று அழைப்பதுடன் இவர்களின் இந்தக் காரியங்களுக்குத் தண்டனையாக நரகம் தான் பரிசு என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

(ஏக இறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் (தெரியும்) கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன் வரும் போது எதையும் காண மாட்டான். அங்கே அல்லாஹ்வைத் தான் காண்பான். அப்போது அவனது கணக்கை நேர் செய்வான். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.
அல்குர்ஆன் 24:39

இவர்கள் செய்கின்ற இந்த வணக்கங்களை கானல் நீர் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது.
இந்தக் கானல் நீரை தண்ணீராகக் காண்பவர்கள் மாபெரும் நஷ்டவாளிகள்!
இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விளக்குகின்றான்.
“செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!

இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.
அல்குர்ஆன் 18:103, 104

1. மாபெரும் நஷ்டவாளிகள்
2. இவர்களது முயற்சி இவ்வுலகிலேயே வீணாகி விடுகின்றது.
3. தீமையைச் செய்து விட்டு அதை நன்மை என்று நம்பி ஏமாறுகின்ற கொடுமை!
ஒருவன் ரயிலில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்து மாட்டிக் கொண்டு தண்டனை பெறுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு தண்டனை பெறுகின்ற அவன், தனக்கு அந்தத் தண்டனை நியாயமானது தான் என்று உணர்ந்தே ஏற்றுக் கொள்கிறான். இதில் அவனுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. ஆனால் அதே சமயம், டிக்கெட் வாங்கிக் கொண்டு பயணம் செய்த ஒருவன், தான் வாங்கிய டிக்கெட் போலியானது என்றாகி, அதற்காகத் தண்டனை பெறும் போது அவன் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாகி விடுகின்றான். அதை அவனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதன் மூலம் அவன் அடைகின்ற ஏமாற்றத்திற்கு ஓர் அளவே இல்லை.

அவ்லியா பக்தர்களின் நிலை இதைப் போன்றது தான்.
கடவுள் மறுப்புக் கொள்கையுள்ள ஒருவன் அல்லாஹ்வை நம்பப் போவதில்லை; மறுமையையும் நம்பப் போவதில்லை. நாளை மறுமையில் அவன் தண்டனை பெறுகின்ற போது அது அவனுக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தரப் போவதில்லை. காரணம், தான் செய்த தப்புக்கு அந்தத் தண்டனை என்று அவன் ஏற்றுக் கொள்ளப் போகின்றான்.

ஆனால் அவ்லியா பக்தர்களின் நிலை அவ்வாறல்ல! அவர்கள் தாங்கள் செய்த காரியங்களை நன்மை என்று நம்பியவர்கள்! அதனால் அவர்களது ஏமாற்றம் அளவிட முடியாதது.

ஷாகுல் ஹமீது மீது பக்தி கொண்டு மவ்லிது ஓதுவது, சந்தனக்கூடு எடுப்பது, கொடி ஏற்றுவது, பீரோட்டம் ஓடுவது, நாகூருக்குப் பயணம் மேற்கொள்வது, அங்கு 14 நாட்கள் தங்குவது போன்ற எல்லாமே மார்க்கத்தின் பெயரால் நன்மை என்று கருதிச் செய்யப்படும் வீணான காரியங்கள்.
வீணான காரியங்களை நன்மை என்று செய்பவர்கள் அல்லாஹ்விடம் மாபெரும் நஷ்டத்திற்குரியவர்கள். நரகத்தைத் தங்குமிடமாக ஆக்கிக் கொள்பவர்கள்.

எனவே ஷாகுல் ஹமீது கந்தூரி மட்டுமல்ல! ஒவ்வொரு அவ்லியா கந்தூரி கொண்டாடும் முஸ்லிமும் இந்தப் பட்டியலில் தான் இடம் பெறுவார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தப் பட்டியலில் ஈடுபடுவோர் தாங்கள் நல்லமல்களைச் செய்திருக்கிறோம் என்று நம்புகிறார்கள். அந்த அமல்கள் அனைத்தையும் காற்றில் பறக்கும் புழுதிகளாக, கரைந்து போகும் சாம்பல்களாக இறைவன் ஆக்கி விடுகின்றான். இதனால் இவர்களது அமல்களை நிறுப்பதற்குத் தராசைக் கூட வைப்பதில்லை.

அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம். அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.
அல்குர்ஆன் 18:105, 106

இத்தனைக்குப் பிறகும் ஒருவர் நாகூர் செல்வாரானால் அவர் அல்லாஹ்வின் இந்த வசனங்களைக் கேலிப் பொருளாக்கியவர் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

ஷாகுல் ஹமீது மவ்லிது தொடர்பான கதை கப்ஸாக்களையும், கவிதை வரிகளையும், கந்தூரி என்ற பெயரில் நடக்கும் மடைமைத்தனங்களையும் மவ்ட்டீகங்களையும் இந்த இதழ் உங்களுக்கு அடையாளம் காட்டுகின்றது.

நேர்வழி காட்டுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

tntj.net என்ற தளத்திலிருந்து…

கல்லூரி பேராசிரியை வெட்டிக்கொலை! காதலன் தற்கொலை முயற்சி

நாகர்கோவில்: காதலித்து பின் திருமணம் செய்ய மறுத்த கல்லூரி பேராசிரியை காதலானால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே சிதறாலை சேர்ந்த மேள்சி தாஸ் மற்றும் கனகம் தம்பதியரின் மூத்த மகள் ஷர்மிலி. சிறுவயதில் குளத்தில் குளிக்க சென்ற போது இவரது ஒரு தங்கையும், தம்பியும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இந்த அதிர்ச்சியில் மேள்சிதாஸ் இறந்து போனார்.

தந்தையை இழந்த ஷர்மிலி தாயின் பராமரிப்பில் வளர்ந்து எம்.இ., படித்து முடித்தார். ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.ஷர்மிலியை அதே பகுதியை சேர்ந்த ஷாஜன் என்பவர் காதலித்தார். தினமும் பின்தொடர்ந்த ஷாஜனை, ஷர்மிலியும் விரும்பினார். எம்.பில்., முடித்து விட்டு பி.ஹெச்டி., படிப்பதாக ஷாஜன் கூறியுள்ளார். ஆனால், ஷாஜன் ஒரு ஏமாற்று பேர்வழி என்று தோழிகள் எச்சரித்ததை தொடர்ந்து, அவரது படித்த கல்விச் சான்றிதழை  ஷர்மிலி கேட்டுள்ளார். இதனால், உஷாராகி போன ஷாஜன் சட்டப்படிப்பு படிப்பதாக மாற்றிக் கூறியுள்ளார்.முன்னுக்கு பின் முரணாக கூறியதால், சந்தேகம் அடைந்து ஷாஜனை உதறிய ஷர்மிலி  தனது தாயிடம் தனக்கு வேறு இட்த்தில் வரன் பார்க்கும்படி, கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவரை ஒருவர் பெண் பார்க்க வருவதை தெரிந்து கொண்ட ஷாஜன், வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் சென்று ஷர்மிலியை வெட்டி கொலை செய்தார். பின், மார்த்தாண்டத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர். காதல் விவகாரத்தில் பேராசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சிதறால் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி:இந்நேரம்.காம்

மக்கள் தொந்தரவால் தாகத்துடன் திரும்பும் ‘யானை கூட்டம்’

சத்தியமங்கலம் வனக்குட்டையில் யானைகள் தண்ணீர் குடிக்கும் இடத்தில் பொதுமக்கள் தினமும் கூட்டமாக நிற்பதால், யானைகள் தண்ணீர் குடிக்காமல் மீண்டும் வனப்பகுதிக்குள் தாகத்துடன் திரும்புகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுயானைகள், காட்டெருமைகள், புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றன.

தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் வழியில் வனத்துறையினர் அமைத்துள்ள குட்டையில் தண்ணீர் தேடி காட்டு விலங்குகள் வருகின்றன.

தற்போது யானைகள் அதிகமாக வசிக்கும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தினமும் மாலை நேரத்தில் இந்த வனக்குட்டைக்கு தண்ணீர் குடிக்க யானைகள் படையெடுத்து வருகின்றது. இந்த காட்சியை காண மதியம் 3 மணி முதல் பண்ணாரி அருகே உள்ள வனக்குட்டை முன் இருகர மற்றும் நான்கு கர வாகனங்களை நிறுத்திக் கொண்டு பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள் யானைகள் தண்ணீர் குடிக்க குட்டைக்குள் வந்தவுடன் ஓ.. என்று சத்தமிடுவதும் அருகில் சென்று போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் யானைகள் பயந்து தண்ணீர் குடிக்காமல் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.

யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் கூறுவதை பொதுமக்கள் கேட்பதில்லை.

நன்றி :

மஃப்டி போலீசாரை கட்டி வைத்து உதைத்த கிராம மக்கள்!

புளியங்குடி அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீசாரை ஊர்மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர்.

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நிட்சபேச நதியிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து புளியங்குடி டிஎஸ்பி பாஸ்கரன் உத்தரவின் பேரில் போலீசார் பூசைப்பாண்டி, மாணிக்கராஜ், வேலுச்சாமி, சிவலமுத்து ஆகிய 4 பேர் நள்ளிரவு சாதாரண உடையில் பைக்கில் ரோந்து சென்றனர்.

அப்போது நெல்கட்டும்செவலை சேர்ந்த சிலர் டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர்.

ஆனால் அவர்கள் அதற்குள் ஊர் எல்லையை தொட்டு விட்டனர். தங்களை பின் தொடர்ந்து வருவது போலீசார் என தெரியாத அவர்கள் வேறு யாரோ தங்களை விரட்டி வருவதாக ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ஊர் மக்கள் திரண்டு வந்து 4 பேரையும் பிடிக்க முயன்றனர். இதில் போலீஸ் [^]காரர்கள் பூசைப்பாண்டி, மாணிக்கராஜ் ஆகியோர் மட்டும் சிக்கிக்கொண்டனர். மற்ற இருவரும் தப்பினர்.

ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள் பிடிப்பட்ட 2 பேரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். அப்போது அவர்கள் நாங்கள் இருவரும் போலீஸ்காரர்கள், அடிக்காதீர்கள் எனக் கூறி சத்தம் போட்டனர் ஆனாலும் மக்கள் விடவில்லை.

அதற்குள்ளாக, தகவல் அறிந்த டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அவர்களை மீட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக நெல்கட்டும் செவலை சேர்ந்த 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த போலீஸ்காரர் சீவலமுத்து வாசுதேவநல்லூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நன்றி :

ரியாத் சர்வதேச இந்தியப் பள்ளியில் தீவிபத்து

துபாய்: சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்திலிருந்து 4500 மாணவ, மாணவியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பள்ளியின் மகளிர் வளாகப் பகுதியில் இந்த விபத்து நடந்தது. இந்த வளாகம் 3 மாடிக் கட்டடமாகும். அங்குள்ள பாதுகாப்பாளர் அறைக்கு வெளியே தீவிபத்து ஏற்பட்டது.

இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொருட் சேதமும் ஏற்படவில்லை என்று பள்ளியின் தலைவர் இம்தியாஸ் தெரிவித்தார்.

தீவிபத்து குறித்து ஆசிரியை ஒருவர் கூறுகையில், வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென புகையுடன் தீ கிளம்பியதால் அனைவரும் மாடிக்கு ஓடினோம். அங்கிருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்டு வெளியேற்றினோம். இதனால் மாடிப்படிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் யாரும் காயமடையவில்லை என்றார்.

தீவிபத்தைத் தொடர்ந்து அனைவரும் வகுப்பறைகளை விட்டு வெளியேற்றி மைதானத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.

பள்ளிகளில் இரவு நேரம் பாடம் நடத்த தடை

இர‌வு நேர‌த்‌தி‌ல் பாட‌ம் நட‌த்த ப‌‌ள்‌ளிகளு‌க்கு அனுமத‌ி ‌கிடையாது எ‌ன்று‌ம் அப்படி இரவு நேரத்தில் பாடம் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க‌ப்படு‌ம் எ‌ன்று‌‌ம் த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அடுத்த மாதம் 10ஆம் வகுப்பு, பிளஸ்2 துவங்க இருப்பதையொட்டி பல மெட்ரிக்குலேஷன் பள்ளிக் கூடங்களில் இரவு 10 மணி வரை ‌சிற‌‌ப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன. ‌சில பள்ளிக் கூடங்களில் மாணவ- மாணவிகளை இரவு பள்ளிக் கூடங்களிலேயே தங்கவைத்து காலையில் தான் அனுப்புகின்றனர். இதனா‌ல் மாணவ- மாணவிகளை ஓய்வின்றி படிக்க வைப்பதால் அவர்களது மன நிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது.

எனவே இரவு நேர வகுப்புகளை நடத்த அரசு சிறப்பு அனுமதி கொடுத்துள்ளதா? என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டது. இது பற்றி தமிழ் மக்கள் பண்பாட்டு கழக மாநில அமைப்பாளர் ரவி, காஞ்‌சிபுரம் மாவட்ட கல்வி அதிகாரி மோகன குமாரிடம் விளக்கம் கேட்டு மனு கொடுத்தார்.

அந்த மனுவை அவர், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் வாசுதேவனுக்கு அனுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்து மெட்ரிகுலேஷன் ஆய்வாளர் எழுதியுள்ள கடிதத்தில், இரவு நேரங்களில் பள்ளிக் கூடங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி எதுவும் கொடுக்கவில்லை.

பள்ளிக் கூட நேரம் தவிர மற்ற நேரங்களில் மாணவர்களை பள்ளியில் தங்க வைத்து பாடம் நடத்த கூடாது. அப்படி இரவு நேரத்தில் விடிய விடிய தங்க வைத்து பாடம் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கூடங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெற்றோர் விருப்பம் தெரிவித்தாலும் கூட இரவு நேரங்களில் மாணவர்களை தங்க வைத்து தனி வகுப்பு நடத்த கூடாது எ‌ன்று அவர் கூறியுள்ளார்.

24dunia.com-என்ற தளத்திலிருந்து…

ஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும்

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான் மவ்லிதின் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பலவருடங்களாக கூறிவருகிறோம். நம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர். எனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த- மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பை எடுத்து எழுதியுள்ளோம். அதோடு அந்த மவ்லித் வாரிகளுக்கு எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் நாம் எடுத்தொழுதியுள்ளோம். அதில் நம் கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

1

மவ்லித் வரிகள்

اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ        اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ

பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !

கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا           وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ

இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,

அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ    وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!

சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!

குர்ஆன் வரிகள்

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!” (அல்குர்ஆன் 3:193)

2

மவ்லித் வரிகள்

يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ      تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ    وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ

பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்!

நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்!

புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள். அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.

குர்ஆன் வரிகள்

அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 22)

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 135)

3

மவ்லித் வரிகள்

حُبُّكُمْ فِيْ قَلْبِنَا مَحْوٌ   مِنْ رَّئِيْنَ الذَّنْبِ وَالْحَرَجِ
صَبُّكُمْ وَاللهِ لَمْ يَخِبِ   لِكَمَالِ الْحُسَنِ وَالْبَهَجِ

தங்களின்பால் நாங்கள் வைத்திருக்கும் நேசம் எங்களின் இதயத்திலிருக்கிறது.

இது எங்களின் பாவக் கறைகளிலிருந்தும் குற்றத்திலிருந்தும் உள்ளவற்றை அழித்துவிடும்.

தங்களின் நேசன் முழுமையான அழகையும் ஒளியையும் பெறுகிற காரணத்தால் அல்லாஹ் மீது சத்தியமாக!

அவர் இழப்பினை அடையவில்லை.

குர்ஆன் வரிகள்

அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 5:74)

4

மவ்லித் வரிகள்

اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ     مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ
وَمَا يَخِيْبُ النَّزِيْلُ     فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ

நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.

குர்ஆன் வரிகள்

நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! நீர்) கூறுவீராக! (அல்குர்ஆன் 72:21)
அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் (முஹம்மதே!) அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:41)

5

மவ்லித் வரிகள்

اَلشَّافِعُ الْمُنْقِذِ مِنْ مَهَالِكِ    وَآلِهِ وَصَحْبِهِ وَمَنْ هُدِيَ

அழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலாவத்துச் சொல்லுங்கள்.

குர்ஆன் வரிகள்

“மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?” என்று (முஹம்மதே!) நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவை களின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 5:17)

6

மவ்லித் வரிகள்

صَلَوَاتُ اللهِ عَلى الْمَهْدِيْ        وَمُغِيْثُ النَّاسِ مِنَ الْوَهَجِ

வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.

குர்ஆன் வரிகள்

“எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் 2:201)
“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)

7

மவ்லித் வரிகள்

اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ     اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ

எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.

குர்ஆன் வரிகள்

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 3 : 160)
“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (அல்குர்ஆன் 7 : 128)

8

மவ்லித் வரிகள்

اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்

குர்ஆன் வரிகள்

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)

8

மவ்லித் வரிகள்

ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ      فَجِئْتُ هذَا الْبَابْ
اُقَبِّلُ اْلاَعْتَابْ        اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ
وَالسَّادَةُ اْلاَخْيَارِ

எனக்கு காரணங்கள்(உபாயங்கள்) நெருக்கடியாகிவிட்டன. எனவே நபியே! தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.

குர்ஆன் வரிகள்

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! (அல்குர்ஆன் 27:62)

9

மவ்லித் வரிகள்

فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ    عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ

எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.

குர்ஆன் வரிகள்

“இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்; என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.(அல்குர்ஆன் 13:28)

10

மவ்லித் வரிகள்

قَدْ فُقْتُمُ الْخَلْقَ بِحُسْنِ الْخُلُقِ       فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ

அழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.

குர்ஆன் வரிகள்

“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:56)

11

மவ்லித் வரிகள்

بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ      اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ

என் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.

குர்ஆன் வரிகள்
“எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:86)

நபி மொழி

நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ 2440)

12

மவ்லித் வரிகள்

وَانْظُرْ بِعَيْنِ الرِّضَالِيْ دَائِمًا اَبَدًا

கருணைமிகும் மாநபியே! காலமெல்லாம் நித்தியமாய் திருப்தியெனும் விழிகளினால் தேம்புமெனைப் பார்த்தருள்வீர்.

குர்ஆன் வரிகள்

அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:72)
அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 9 : 109)

13

மவ்லித் வரிகள்

وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ        فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ

என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே! ஆதலினால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.

குர்ஆன் வரிகள்
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்”(என்றார்.) (அல்குர்ஆன் 11 : 90)

14

மவ்லித் வரிகள்

إِنَّا نَسْتَجِيْرُ فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ

நிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.

குர்ஆன் வரிகள்

தீமைகளைச் செய்தோரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு தீமைக்கு அது போன்றதே தண்டனை. அவர்களை இழிவும் சூழ்ந்து கொள்ளும். இருள் சூழ்ந்த இரவின் ஒரு பகுதியால் அவர்களின் முகங்கள் மூடப்பட்டது போல் இருக்கும். அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் (அல்குர்ஆன் 10 : 27)
மவ்லித் வரிகள் நபியே! தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன்.

நபி மொழிகள்

அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவூத் 2829)

சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்! இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ 2679)

15

மவ்லித் வரிகள்

اَنْتَ سَتَّارُ الْمَسَاوِيْ     وَمُقِيْلُ الْعَثَرَاتِ

எம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ, நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கிவிடுபவர் தாங்களன்றோ.

اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ

நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.

يَا مَنْ يَّرُوْمُ النَّعِيْمَا      بِحُبِّهِ كُنْ مُقِيْمًا

وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا      لَدَيْهِ بُرْعُ  السَّقَامِ

நயீம் எனும் சுவனத்தை நாடுபவனே! நபியவர்களின் நேசத்தைப் பற்றிக் கொண்டு தங்குபவனாக நீ இரு. நீ நோயாளியாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் நோயின் நிவாரணம் இருக்கிறது.

குர்ஆன் வரிகள்

நான் நோயுறும் போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)

நபி மொழி

மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே! நோயைப் போக்கி, அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (நூல் : புகாரீ 5675)

16

மவ்லித் வரிகள்

مُسْتَشْفِعًا نَزِيْلَ هذَا الْحَرَمِ       فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ

மதீனாவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின் பரிந்துரையைத் தேடியவனாக தங்கள் முன் நிற்கிறேன். எனவே, நிரந்தர நல்லுதவி செய்வதின் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக.

குர்ஆன் வரிகள்

“அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா?” என்று கேட்பீராக! “பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 39:43,44) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை. (அல்குர்ஆன் 3:126)

17

மவ்லித் வரிகள்

اَنْتَ مُنْجِيْنَا مِنَ الْحُرَقِ           مِنْ لَهِيْبِ النَّارِ وَاْلاَجَجِ
ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا        مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ

நரக நெருப்பின் ஜவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களை காப்பாற்றுவது தாங்களே ஆவீர்! எங்களின் பாவங்கள் அழிப்பவரே! தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும். நபியே! தங்களின் பரந்த மனப்பான்மையினால் கரிக்கும் நரக நெருப்பின் கொழுந்து விட்டெரியும் ஜவாலையை அணைத்து விடுங்கள். தங்களின் இரக்கத் தன்மையால் என் ஈரலின் வெப்பத்தைக் குளிரச் செய்யுங்கள்.

குர்ஆன் வரிகள்

யாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா? (சொர்க்கம் செல்வான்?). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா? (அல்குர்ஆன் 39:19)

“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)

tntj.net என்ற தளத்திலிருந்து…

அநீதிக்கு எதிரான நடவடிக்கை என்ன? நீதிபதி கேள்வி

Thackeraysநாசகாரச் செயல்கள்: “தாக்ரேக்கள், ராணே ஆகியோர் மீது மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” உச்ச நீதிமன்றம் கேள்வி.

கட்சித் தொண்டர்களைத் தூண்டி விட்டு, கடந்த ஆண்டில் மட்டும் பலமுறை பொதுமக்களின் சொத்துகளை நாசப்படுத்தியுள்ள அரசியல் தலைவர்களான பால் தாக்ரே, உத்தவ் தாக்ரே, ராஜ் தாக்ரே மற்றும் நாராயண் ராணே போன்றோர் மீது இதுவரை நடைவடிக்கையெடுக்காத மாநில அரசினை மும்பை உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை 03.02.2010 அன்று கடுமையாகக் குற்றம் சாட்டியது.

ஜெ.என் படேல், பி.ஆர் கவய் ஆகியோரின் தலைமையில் செயல்படும் விசாரணைக் குழு, பிரபல முன்னாள் ஐப்பீஎஸ் (IPS ) அதிகாரி ஜுலியோ ரிபெரோ மூலம் தாக்கல் செய்யப் பட்ட மக்கள் நல வழக்கை, அதன் குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் ஆய்வு செய்கிறது. அதில், “குற்றவாளிகளிடம் இருந்து நிரூபிக்கப் பட்ட நான்கு நாசகாரச் செயல்களுக்குப் பகரமாக முறையான நஷ்ட ஈடு அபராதமாக வசூலிக்கப்பட வேண்டும்” என்று ரிபெரோ கோரியுள்ளார்.

வழக்குத் தொடுக்கப்பட்ட நாசகாரச் செயல்கள்:

(1)  சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவுத்தின் தலைமையில் சிலர் கும்பலாக இன்டெர் காண்டினண்டெல் ஹோட்டலின் சொத்துகளை நாசப்படுத்தியது,

(2)  மும்பை நவ் நிர்மாண் சேனா எனும் ராஜ் தாக்ரேயின் கட்சியின் மூலம் மும்பைப் பல்கலைக் கழகம் மீதான தாக்குதல் நடத்தியது,

(3) அழகு நிலையங்களின் மீதான தாக்குதல்களை நடத்திச் சேதம் விளைவித்தது,

(4)   நாராயண் ராணேவின் ஆதரவாளர்கள் மூலம் ‘நவாகாள்’ எனும் தினசரியின் அலுவலகத்தில் நடத்திய தாக்குதல்கள் ஆகும்.

“இன்டெர் காண்டினண்டெல் ஹோட்டலின் சொத்துகளை நாசப்படுத்தியது தொடர்பாக, பால் தாக்ரே மற்றும் உத்தவ் தாக்ரே மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” என்று நீதிபதி படேல் கேள்வி எழுப்பினார்.

“இவர்களைப் போன்ற உயர்மட்டத் தலைவர்கள் வீட்டில் அமர்ந்து கொண்டு, இதுபோன்ற அராஜகச் செயல்களை ஏவுகின்றனர். மேலும் ராஜ் தாக்ரே மற்றும் நாராயண் ராணே சம்பந்தப்பட்ட இன்னபிற அடாவடி சம்பவங்களுக்காக அவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” என்றும் கேட்டார். மேலும், “அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாநில அரசு விரும்பா விட்டால், அரசே அவற்றுக்கான நஷ்ட ஈட்டை வழங்கட்டும்” என்றும் அவர் கூறினார்.

அரசாங்க சார்பில் இதற்கு பதிலளிக்கையில், நிரஞ்சன் பண்டித் எனும் அதிகாரி நாசகாரச் செயல்களுக்குத் தலைமை வகித்த தலைவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு சம்பவங்களில் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீதிபதி படேல் மேலும் இதுபற்றி விபரமாகக் கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் மூலம் இது போன்ற விவகாரங்களைக் கையாளுதல், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் உள்ளன” என்று குறிப்பிட்டார்.

“மேற்காணும் தலைவர்கள் மீது எடுக்க உள்ள நடவடிக்கைகள் பற்றி, அரசாங்கத்தின் நிலைபாட்டையும் விசாரணையின் விபரங்களையும் விபரமாக உள்துறைத் தலைமைச் செயலாளர் இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது பொதுநல அமைப்புகள் ஒன்றிணைந்து சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களைப் பற்றி அவர்கள் யாராக இருப்பினும் எவ்விதத் தயக்கமோ அச்சமோ இல்லாமல் பொதுநலப் புகார் மனு தாக்கல் செய்திட வேண்டும். அதை அரசும் நீதிமன்றமும் முறையாக விசாரித்து, குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி தண்டனையும் அபராதமும் விதிக்க முன் வரவேண்டும்.

பொதுமக்கள் இதுபோன்ற சுயநலவாதிகளை இனம் கண்டு, அவர்களது அடாவடிகளுக்கு மௌன ஆதரவளித்திடாமல் புறக்கணித்து, அவர்களுக்குத் தங்கள் முழு பலத்தினை, நடுவுநிலையாகவும் முறையாகவும் உணர்த்திட வேண்டும்.

அப்போதுதான் சட்டத்தைத் துச்சமாகக் கருதி எதையும் யாரையும் சிறிதும் மதிக்காமல் விஷக்கருத்துக்களை விதைக்கும் விதமாக எழுதியும் பேசியும் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொள்கின்ற, வன்முறையைத் தூண்டி விடுகின்ற, பொதுமக்களின் உயிர்-உடமை-நிம்மதிக்கு ஊறு விளைவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்ற சுயநல விஷமிகளின் கொட்டம் அடங்கும். நன்றி:சத்தியமார்க்கம்.காம்

பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம்

பிரப்வரி 14 : காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வு களை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentine day) பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயமாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்தது.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை (காமக்களியாட்டத்தை) ஊக்கப் படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி சமுதாயத்தை சீரழித்து கொண்டு இருக்கின்றன. மீடியாக்கள் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதை சாதாரணமான விஷயமாக்கிவிட்டது.

கேள் ஃபிரண்ட் இல்லாதவர்களை கோமாளிகள் போல் சித்தரித்து, கேள் ஃபிரண்ட் இல்லாத நல்ல ஒழுக்கம் உள்ள இளைஞர்களை ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு காதலை கவுரமான விஷயமாக மாற்றி விட்டது.

உங்கள் காதலிக்கு, காதலனுக்கு SMS அனுப்புங்கள் அதை டிவியில் போடுகின்றோம் விலை வெறும் ரூ.3, ரூ.6 தான் என இளஞர்களின் உணர்வுகளை காசாக்கி கொண்டிருக்கின்றனர் மீடியாக்கள். இதை அறியாத அப்பாவி இளைஞர்களும் இளம் பெண்களும், இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் மூழ்கி வருகின்றனர்.

காதலிப்போர் கவனத்திற்க்கு :

காதல் என்பது ஒரு மாயை, இளம்வயதியில் வரும் உணர்வுகளின் வெளிப்பாடு, இதை நாம் கவனமாக கட்டுப்பாடுடன் வைத்து கற்பை காத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனம் தவறினாலும் கற்பை இழந்து சமுதாயத்தில் இழிபிறவிகளாக நடமாட வேண்டியது தான்.

பெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை, திருமணத்தில் முடிந்த பெரும்பாலான காதல் பிரச்சனையில் தான் முடிந்துள்ளது. காதலிக்கும் போது நம்முடைய நற்குணங்கள், மட்டுமே வெளிப்படும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள், ஆனால் திருமணத்திற்க்கு பிறகு நிஜவாழ்க்கைக்கு வந்த பிறகு குடும்பத் தின் கஷ்டம்தான் கண் முன்னே இருக்குமே தவிர கற்பனை காதல் அல்ல,

ஆசை வார்தைகளை மட்டுமே கண்ட காதல் வாழ்க்கை முடிந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வார்த்தை தான் மிஞ்சி இருக்கும். ஏன் இவளை திருமணம் செய்தோம் நம் தாய் தந்தையர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாம் என எண்ணம் வரும் பின்பு வாழ்க்கை கசந்துவிடும், பெற்றோர்களின் ஆதரவு இல்லாததால் , தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்ன தவறு செய்தாலும் பெரியவர்களிடம் முறையிட முடியாமல் போய்விடும், (காதலன் ) கணவன் செய்யும் எல்லா கொடுமைகளையும் சகித்துகொண்டும் வாழ வேண்டிய அவல நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இன்று காதலுக்கு துணை நிற்க்கின்றேன் என்று சொல்லும் நண்பர்கள் எல்லாம் நாளை காணமல் போய்விடுவார்கள், வாழ்வில் கஷ்டம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.

சினிமாக்கள் தான் உங்களுக்கு தவறான வழிகாட்டுகின்றன, சினிமாவில் பார்ப்பது போல் இல்லை காதல், காதல் எங்கு போய் முடியும் என்றால், ஒன்று கற்பை இழந்து இழி பிறவிகளாக சமுதாயத்தில் நடமாடுவது, அல்லது காதலனை திருமணம் செய்தாலும் அவன் செய்யும் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டு உதவ ஆளில்லா மல் கஷ்ட்டப்பட்டு கொண்டே வாழ்வது.

காதல் செய்வதால் ஏற்படும் இழப்புகள் :

இளம் பெண்களே! பெரும்பாலும் காதலிக்கும் இளைஞர்கள் தங்களுடைய உணர்வுகளுக்கு தீனிபோடவே பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதல் என்னும் மாய வலை யில் விழ வைத்து தங்கள் இச்சைகளை தீர்த்துகொள்கின்றனர். இது அறியாத அப்பாவி இளம் பெண்கள் ஆண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி தங்களுடைய கற்பை தொலைத்து மானம் இழந்து, மரியாதை இழந்து பெற்றோர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திகொடுத்து சமுதாயத்தின் இழி சொல்லுக்கும் பழி சொல்லுக்கும் ஆழாகின்றனர். நீங்கள் காதலிப்பதாலோ, காதல் என்ற போர்வையில் ஆண்களுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதினாலோ ஆண்களுக்கு எந்த நஷ்ட்டமும் இல்லை, அனைத்து நஷ்டமும், கஷ்டமும் பெண்களுக்குதான்.

காதல் காதல் என்று உங்களுடன் சேர்ந்து எல்லா தவறுகளும் செய்துவிட்டு அவனால் சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகின்றது, ஆனால் பெண்களாகிய உங்கள் நிலையை எண்ணி பாருங்கள், திருமணம் கடினமாகின்றது, பிறகு நமக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நம்மை மதிப்பார்களா? சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே! ஆண்கள் தன் இச்சையை தீர்த்துகொள்ள உங்களை ஏமாற்றுகின்றான், நம்பாதீர்கள், பெற்றோர் சொல்லும் அறிவுறையை கேட்டு நல்ல ஒழுக்கமுள்ள, ஆற்றல் உள்ள பெண்களாக சமுதாயத்தில் கண்ணியத்துடன் வலம் வாருங்கள், உங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை மதித்து நடக்கும் படி சமுதாயத்தில் மதிப்புள்ள மங்கையாக வாழுங்கள். உணர்வுகளை கட்டுபடுத்தி கட்டுபாட்டுடன் இருந்தால் கண்ணியமாக வாழலாம்

படிக்கும் இளைஞர்களே!

காதலிக்காக ஒதுக்கும் நேரத்தை நம் படிப்பிற்க்காக ஒதுக்கினால் அரியர் இல்லாமல் (பெயில் ஆகாமல்) தெர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமரலாம். நம்மை கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள்ளை தன்னை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும் வாழ்கையையும் வீணடிப்பது.

இளைஞர்களே!

உங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர். காதலியின் சின்ன சிரிப்பிற்க்காக உங்கள் பெற்றோர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டுமா? சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே! இது உங்களுக்கு தேவையா? எனவே காதலிக்க வேண்டும் என கனவில் கூட நினைக்காதீர்கள். வாழ்கை இழந்து மன நோயாளியாகிவிடுவோம்.

காதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்

காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம் . காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.

இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது”

(நூல்: புகாரி 6243)

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும்இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிருக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.தன்னை பெற்றத் தாய் வளர்த்த தந்தை தன்னை நேசிக்கவில்லை என எந்த ஒரு இளைஞனும் தற்கொலை செய்து கொண்டுள்ளானா? ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.

இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.

இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா?’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!

டிசம்பர் 1 ஆம் தேதிக்கு காரணமே பிப்ரவரி 14 ஆம் தேதி தான்

எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோயை ஒழிக்க டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகின்றது. எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் காமக் களியாட்டங்களை (காதலை) அங்கீகரிக்கும் இந்த காதலர் (கற்பு கொள்ளையர் ) தினமும் உலக எயிட்ஸ் தினமும் ஒன்றே. எயிட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவ இது போன்ற காம களியாட்டங்களை அறங்கேற்றும் விழாகள் முதல் நிலை காரணிகளாய் இருக்கின்றன. எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் இந்த காதலுக்கு (காம களியாட்டத்திற்க்கு) எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14-ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

வெளியீடு :

இளைஞர்களை நல்வழிபடுத்தும் பணியில் TNTJ மாணவர் அணி