சவுதி செல்கிறார் மன்மோகன் சிங்!

பிப்ரவரி கடைசி வாரத்தில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் சவுதி அரேபியா நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று சவுதி அரேபியா தூதர் பைசல் எச்.டிராட் தெரிவித்தார்.

2006 ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ், பிரதமர் மன்மோகன்சிங்கை தங்களது நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்ததாகவும், அதை ஏற்று மன்மோகன்சிங் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமரின் சுற்றுப்பயணத்தின் போது சவுதி அரேபியா நாட்டு சிறையில் உள்ள இந்திய கைதிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஒப்பந்தம் உள்பட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் அவர் கூறினார்.  இந்நேரம். காம்-என்ற தளத்திலிருந்து…