புதுவை : புதுச்சேரி முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினருக்கு அறிவித்த இட ஒதுக்கீட்டை, வரும் கல்வியாண்டிற்குள் அமல்படுத்த வேண்டும் என, சமூக நீதிப் பேரவையின் நிறுவன தலைவர் விஸ்வநாதன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.
புதுச்சேரி சமூக நீதிப் பேரவை கூட்டம் எனது (விஸ்வநாதன்) தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக கண்ணோட்டத்தோடு அமைக்கப்பட்டது. கடந்த காலங்களில் சமுதாயத்திற்கான அங்கீகாரம் தொடர்பாக சமூக நீதிப் பேரவை மூலம் பல்வேறு திட்ட அறிக்கைகளை கொடுத்துள்ளோம். அப்போது ஆணையராக இருந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் சமூக கண்ணோட்டத்தோடு குறைகளை சரி செய்தனர். ஆனால் இப்போதுள்ள ஆணைய உறுப்பினர்கள் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் வேண்டியவர்களாக செயல்படுவதால் ஆணையத்தின் செயல்பாடுகளில் குறைபாடு உள்ளது.
இஸ்லாமியர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அறிவித்த திட்டங்களை அரசு நிறைவேற்றாமல் இருப்பது வஞ்சிக்கின்ற செயலாக உள்ளது. இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினருக்கு அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டிற்குள் அமல்படுத்த வேண்டும்.மிக மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை சரிசமமாக இருப்பதற்கேற்ப 33 சதவீதத்தை 60:60 என்று சமமாக பிரித்து இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையும், மாநில அரசையும் சமூக நீதிப்பேரவை வற்புறுத்துகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு விஸ்வநாதன் எம்.எல்.ஏ., கூறினார். அமைப்பாளர் சம்பந்தம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Filed under: பொதுவானவை | Tagged: பழங்குடியினரின் இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிக்கை, rash | View அமெரிக்காவில் தொடர்ந்து கர்ப்பமடையும் ஆண்கள்! அமெரிக்காவில்-தொடர்ந |
மறுமொழியொன்றை இடுங்கள்