முஸ்லிம் பிரதமர் வேண்டும் : அமர்சிங் கூறுகிறார்!

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மனம் புண்பட்டுள்ள முஸ்லிம்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் முஸ்லிம் ஒருவர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியிலிருந்து அண்மையில் விலகிய அமர்சிங் கூறியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமர்சிங் அண்மையில் அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகினார். இந்நிலையில் மும்பை பீவண்டி சட்டசபைத் தொகுதிக்கு நடைபெறம் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அபூ அஜ்மியின் மகன் பர்ஹான் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அமர்சிங், முஸ்லிம்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் இந்தியாவின் பிரதமராக முஸ்லிம் ஒருவர் வரவேண்டும் என்று கூறினார்.

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி மற்றும் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட எந்த தலைவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால், சீக்கியரான மன்மோகன் சிங் பிரதமர் பதவியேற்ற பின், 1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியருக்கு எதிரான கலவரத்திற்கு மன்னிப்புக் கோரினார் என்றும் அமர்சிங் கூறினார்.

இந்நேரம். காம்-என்ற தளத்திலிருந்து….

அமெரிக்காவில் தொடர்ந்து கர்ப்பமடையும் ஆண்கள்!

அமெரிக்கா: கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு ஆண்மகன் ஒருவர் விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள  போகிறார். அமெரிக்கா, ஓரிகான் மாநிலத்தில், சில ஆண்டுகளுக்கு முன் பீட்டில் என்ற ஒரு ஆணுக்கு, குழந்தை பிறந்தது. அவரை அடுத்து தற்போது, கலிபோர்னியா மாநிலத்தில், ஸ்காட் மூர் என்ற ஆண், கர்ப்படைந்துள்ளார்.பெண்ணாகப் பிறந்து, லாரா என்ற பெயருடன் இருந்த ஸ்காட் மூர், சில ஆண்டுகளுக்கு முன் ஆணாக மாற விரும்பி, அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

எனினும், உடலில் பெண்ணுக்கான உள்ளுறுப்புகள் எதுவும் நீக்கப்படவில்லை. இவரைப் போலவே தாமஸ் என்பவரும், பெண்ணாகப் பிறந்து, ஆணாக மாறினார். ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவரும், 2007ல் ஒரு வீட்டில் வாழத் தொடங்கினர்.இவர்களில் ஸ்காட் மூருக்கு, உடல் உள் உறுப்புகள், பெண்ணுக்கு இருப்பது போலவே உள்ளதால், செயற்கை கருவூட்டல் முறையில், கடந்த ஜூனில், மகப்பேறு கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, ஸ்காட் மூர் வயிற்றில் குழந்தை வளர்கிறது. வரும் பிப்ரவரியில், அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது. இது குறித்து, ஸ்காட் மூர் கூறுகையில், நாங்கள் இருவரும், ஆவலுடன் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். மிக மகிழ்ச்சியாக உள்ளது. நான் கருவுற்ற செய்தியை முதன்முதலில் கேட்டது முதல்  உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்றார். இச்செய்தியை, பிரிட்டனிலிருந்து வெளியாகும், “டெய்லி மெயில்’ என்ற தினசரி பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்நேரம். காம்-என்ற தளத்திலிருந்து….

முஸ்லிம்கள், பழங்குடியினரின் இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிக்கை

புதுவை : புதுச்சேரி முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினருக்கு அறிவித்த இட ஒதுக்கீட்டை, வரும் கல்வியாண்டிற்குள் அமல்படுத்த வேண்டும் என, சமூக நீதிப் பேரவையின் நிறுவன தலைவர் விஸ்வநாதன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.

புதுச்சேரி சமூக நீதிப் பேரவை கூட்டம் எனது (விஸ்வநாதன்) தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி  பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக கண்ணோட்டத்தோடு அமைக்கப்பட்டது. கடந்த காலங்களில் சமுதாயத்திற்கான அங்கீகாரம் தொடர்பாக சமூக நீதிப் பேரவை மூலம்  பல்வேறு திட்ட அறிக்கைகளை கொடுத்துள்ளோம். அப்போது ஆணையராக இருந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் சமூக கண்ணோட்டத்தோடு குறைகளை சரி செய்தனர். ஆனால் இப்போதுள்ள ஆணைய உறுப்பினர்கள் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் வேண்டியவர்களாக செயல்படுவதால் ஆணையத்தின் செயல்பாடுகளில் குறைபாடு உள்ளது.

இஸ்லாமியர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அறிவித்த திட்டங்களை அரசு நிறைவேற்றாமல் இருப்பது வஞ்சிக்கின்ற செயலாக உள்ளது. இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினருக்கு அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டிற்குள் அமல்படுத்த வேண்டும்.மிக மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை சரிசமமாக இருப்பதற்கேற்ப 33 சதவீதத்தை 60:60  என்று சமமாக பிரித்து இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையும், மாநில அரசையும் சமூக நீதிப்பேரவை வற்புறுத்துகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு விஸ்வநாதன் எம்.எல்.ஏ., கூறினார். அமைப்பாளர் சம்பந்தம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஈஜிப்ட் ஏர் விமானத்தில் புகை 320 பயணிகள் உயிர் தப்பினர்!

ஜித்தா: சவூதி துறைமுக நகரான ஜித்தாவில் உள்ள அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை எகிப்து நாட்டிற்கு புறப்பட தயாராக இருந்த ஈஜிப்த் ஏர் என்ற எகிப்திய பயணிகள் விமானம் ஒன்றில் திடீரென கரும் புகையுடன் கூடிய வாசம் வந்ததை தொடர்ந்து அவ்விமானம் உடனடியாக ஓடுபாதையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

போயிங் 777, எண் 607 என்ற விமானம் 320 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த்து அப்போது அதன் பின்புறத்திலிருந்து எரிந்து கருகும் வாசம் வந்தது இதனை தொடர்ந்து அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர், விசாரணை குழுவினர் விசாரணைக்காக அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்றும் விமான நிலைய தலைமை இயக்குனர் மாஸின் கஷோகி தெரிவித்தார் மேலும் தீயணைப்பு படையினர் தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மின்சார வயர்கள் எரிந்ததினால் இந்த வாசம் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது

ஆனால் இதுவரையில் அதற்கான காரணம் கண்டறியப்படவில்லை விமான நிலையத்தின் தேர்ச்சி பெற்ற பொறியாளர்கள் தொடர்ந்து விமானத்தை பரிசோதித்து கொண்டிருப்பதாகவும் புகை வந்ததிற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் காஷோகி கூறினார்.இதனிடையே பயணிகள் பத்திரமாக வெயிட்டிங் லவுஞ்சுக்குள் அமர வைக்கப்பட்டனர் அவர்களிடையே எந்த பதற்றமோ பயமோ இன்றி நல்ல நிலமையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

துபையில் சிறுவனை வன்புணர்ந்து கொன்றவனுக்கு மரண தண்டனை!

துபை: ஐக்கிய அரபு நாடான துபையில் கடந்த நவம்பர் மாதம் நான்கு வயது சிறுவனை கழிப்பறையில் வைத்து வன்புணர்ச்சி செய்து கொலை செய்த அந்நாட்டு பிரஜை ஒருவருக்கு துபை கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது.

முப்பது வயது நிரம்பிய துபை பிரஜையான அவர் கப்பல் கேப்டனாக பணிபுரியும் அவர் ஏற்கனவே பாலியல் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்து கடந்த ஆண்டுதான் விடுவிக்கப்பட்டார் நீதிபதி தனது தீர்ப்பில் கேப்டன் அந்த குழந்தையிடம் கருணை காட்டாததினால் இந்த நீதிமன்றமும் அவருக்கு கருணை காட்ட வில்லை என்று கூறியிருக்கிறார். இத்தீர்ப்பு குறித்து பாஹிம் முனீர் என்பவர் கூறும்போது இத்தீர்ப்பு கூறப்பட்டபோது நீதிமன்றமே அமைதியானது என்றார்.

தலைமை பிராஸிக்கூட்டர் யூசுஃப் ஃபௌலாஸ் கூறும்போது கடந்த 2009  நவம்பர் மாதம் 29 ஆம் தேதி ஈத் தினத்தன்று பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மூசா குதாப்க்ஷ் என்ற சிறுவனை வன்புணர்ந்து கொன்ற இவனுக்கு அதிக பட்ச தண்டனையான மரண தண்டனையை தீர்ப்பளிக்கும்படி நீதிபதியை கேட்டு கொண்டதாக தெரிவித்தார். விசாரணையில் குற்றவாளி சிறுவனை கழிப்பறைக்கு அழைத்து சென்றதையும் அங்கு அவனை வன்புணர்ந்ததையும் மனித நடமாட்டம் கேட்டதால் அச்சிறுவனை தலையை தரையில் அடித்து கொன்றதாக ஒப்புகொண்டான்.

தீர்ப்பின் போது அச்சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.இதனை தொடர்ந்து மருத்துவர்கள் கொலையாளியை மருத்துவ பரிசோதனை செய்து அவ்ர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக சான்றளித்தனர், அடுத்த 15 தினங்களில் இவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் எனத்தெரிகிறது