ஹெய்ட்டியில் ஐநா மீட்பு பணியாளர்கள் 70 பேரை உயிருடன் மீட்டனர்.

ஹெய்ட்டியில் ஐநா மீட்பு பணியாளர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளனர். இதுவரை நடந்த மீட்பு பணிகளிலேயே இம்முறை தான் இவ்வளவு அதிகமானோரை 70 மீட்டுள்ளோம் என ஐநா அதிகாரி தெரிவித்தார். ஐநா வரலாற்றில் இதுவரை நடந்த மீட்பு பணிகளிலேயே ஹெய்ட்டியில் தான் அதிக சவால் நிறைந்ததாக மேலும் தெரிவித்த ஐநா அதிகாரிகள் மேலும் இடைவிடாமல் தங்கள் மீட்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதாக தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இன்னும் பலர் நல்ல உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். ஆயினும் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளான Port-au-Prince எனும் நகர்புரங்களிலில் இருப்பவர்களுக்கு முழுமையாக உதவிகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இன்னும் பல அதிகமானவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி தவிப்பதால் நிலநடுக்க அழிவிகளில் இருந்து தப்பித்தவர்கள் மற்றும் மீட்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் உறவினர்கள் குடும்பத்தினர் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டனாரா என்பதை கூட உறுதிப்படுத்த முடியாத நிலமை உள்ளதாக தெரியவருகிறது. மேலும் குடிநீர் உணவு பெற்றுக் கொள்வதில் மக்களிடையே மோதல்கள் வெடிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

புர்கா பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமா?

hijab2பிரான்ஸ் அதிபர் சர்கோஸி புர்கா பெண்ணடிமைத்த னத்தின் அடையாளம் என்று கூறியதாக தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இங்குள்ள சில முஸ்லிம் அமைப்புகள் இந்தக் கூற்றுக்கு எதிராக தங் களின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன.

பெண்கள் போகப் பொருளாகக் கருதப்படாமல் கண்ணியமாக மதிக்கப்பட வேண்டுமானால் புர்கா போன்ற உடல் மறைக்கும் ஆடைகளைத்தான் அணிய வேண்டும். காமுகர்களின் பார்வையில் இருந்து பெண்களைக் காப்பாற்றும் புர்காவை பெண்ணடிமைத்தனத்தின் அடையாளம் என்று யார் கூறினாலும் அவர்கள் அறிவீனர்களே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
(இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? என நமது நூலில் ஹிஜாப் எனும் புர்கா பெண்ணடிமைத்தனம் அல்ல என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது)

புர்காவைத் தடை செய்வதாக யார் கூறினாலும் உலக முஸ்லிம்கள் ஒன்று திரண்டு போராடுவது அவசியம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இந்திய ஊடகங்கள் செய்தியைத் திரித்து வெளியிட்டுள்ளதாகவே நமக்குத் தோன்றுகிறது. உடலை மறைக்கும் ஆடைக்கு தடை விதிக்கப்படும் என்றோ, அது பெண்ணடிமைத்தனம் என்றோ பிரான்ஸ் அதிபர் கூறியதாகத் தெரியவில்லை.

புர்காவுடன் முகத்திரை அணிந்து முகத்தை மறைத்து அடையாளம் இல் லாதவர்களாக இருப்பதை மத அடையாளமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதாகவே தெரிகிறது. பள்ளிக்கூடங்களில் தடை செய்ததுபோல் அனைத்து இடங்களிலும் பெண்கள் முகத்திரை அணிந்து வருவது தடை செய்யப்படும் என்றுதான் பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

இதை உறுதி செய்யும் வண்ணம் லண்டன் பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி

http://www.telegraph.co.uk/news/worldnews/europe/france/6946579/Women-who-wear-burkas-in-France-face-700-fine.html

(லிங்க் அனுப்பியவர் இனிமை)

இலட்சக்கணக்கான முஸ்ம்கள் வாழும் பிரான்ஸ் நாட்டில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையினர்தான் முகத்திரை அணியும் வழக்கமுடையவர்கள். இதை மற்ற முஸ்ம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாகத்தான் பிரான்ஸின் ஒட்டுமொத்த முஸ்ம்களும் ஒன்று திரண்டு எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை.

முகத்திரை போட்டுக் கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டால் அதை எதிர்க்காமல் இருப்பதுதான் சமூகத்துக்கு நல்லது. முகத்திரை அணிந்து தமது அடையாளத்தை மறைத்துக் கொள்ளும்போதுதான் அதிகமான ஒழுங்கீனங்கள் ஏற்படுகின்றன.

தன்னை யாரும் அடையாளம் காண மாட்டார்கள் எண்ணும்போது சில பெண்கள் யாருடனும் செல்லக்கூடிய துணிச்சல் ஏற்படுகிறது என்பதை நாம் காண முடிகிறது. சில ஆண்களும் முகத்திரை போட்டுக் கொண்டு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கும் இது உதவுகிறது.

கேவலமான தொழில் செய்யும் முஸ் மல்லாத பெண்கள் கூட முகத்திரை போட்டுக் கொண்டு முஸ்ம்களைக் கேவலப்படுத்துவதையும் பெருநகரங்களில் காணலாம். முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளை இடாமல் இருந்தும் முகத்தை மறைப்பதால் மோசமான விளைவுகள்தான் ஏற்படுகின்றன.

சென்னையில் முகத்திரை அணிந்து ஊர் சுற்றும் இளம் பெண்களில் சரி பாதி பேர் முஸ்ம்கள் அல்ல; காதல் லீலையை மறைப்பதற்காக முகத்திரையை தவறாகப்படுத்துவோர்தான் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

சென்னை போன்ற நகரங்களில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிந்தவர்கள் இஸ்லாத்தில் இல்லாத முகம் மறைத்தலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதே சமயம் முகம், முன் கை தவிர மற்ற உறுப்புகளை மறைப்பதற்கு தடை சட்டம் போட்டால் அதைக் கடுமையாக நாம் எதிர்த்தாக வேண்டும். அப்படிச் சட்டம் இயற்ற எந்த ஜனநாயக நாட்டிலும் இடமில்லை.

முகத்தை மறைப்பதைத் தடுக்க தக்க காரணங்களைக் கூறுவதுபோல் இதற்கு எந்தக் காரணத்தையும் கூற முடியாது; தடுக்கவும் முடியாது. முகத்தை மறைப்பது தவிர்த்த புர்காவுக்கு பிரான்ஸ் தடை விதிக்கவுள்ளது என்று கருதுவோர் அதற்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டினால் களமிறங்கிப் போராடவும் நாம் தயங்க மாட்டோம்.

(குறிப்பு : பிரான்ஸ் அதிபர் இஸ்லாம் மீது காழ்ப்புணர்வு உள்ளவர் என்பதைப் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளார். அவரது நோக்கத்தை நியாயப்படுத்துவதற்காக இதைக் கூறவில்லை. இஸ்லாம் கூறாத ஒன்று சமூகத்தில் கேடு ஏற்படுத்தும்போது அதைத் தவிர்ப்பது நல்லது என்ற அடிப்படையில்தான் இதைக் கூறுகிறோம்.)

tntj.net என்ற தளத்திலிருந்து….

‘கிறிஸ்துமஸ்’ – ஓர் இஸ்லாமிய பார்வை!

மனிதனானவன் சந்தோசத்திற்கு எப்போதுமே அடிமை தான். மகிழ்ச்சிக்காக மனிதன் படாதபாடுபடுவதை கண்கூடாகக் கண்டுடிகாண்டிருக்கிறோம். அதே நேரம் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரையிலும் சந்தோஷத்தைத் தரும் விடயங்கள்

வித்தியாசப்படுகின்றன. தனிநபர் சந்தோசத்தை விட ஒரு சமூகத்தின் மகிழ்ச்சி தான் முக்கியமான ஒன்றாகும்.

ஒவ்வொரு மத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அந்தந்த மதத்தோடு தொடர்பான பண்டிகைகளை், கொண்டாட்டங்கள் குட்டிப்போட்ட பூனையைப் போல் வருடாவருடம் சுற்றிச் சுற்றி வந்துக் கொண்டேயிருக்கின்றன. அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையானது பரவலாக கிறிஸ்தவர்களால் வருடா வருடம் டிசம்பர் மாதத்தின் கடைசிப் பகுதியில் உலகின் எல்லாப் பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

எனவே முஸ்லீம்கள எல்லா நிலைகளிலும் இஸ்லாத்தின் நிழலில் கீழ் நின்று தான் எந்த ஒரு விடயத்தையும் அணுகவேண்டும் என்கின்ற கட்டாய நிலை இருக்கின்றது. ஏனென்றால் நாம் மறுமையை மையமாகக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிச்செல்பவர்கள். எனவே உலகில்

கிடைக்கும் சந்தோஷத்தை இழந்து விடக்கூடாது. எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையில் முஸ்லீம்களும் பங்குகொள்ளலாமா? என்ற கேள்விக்கு விடைகாணத்தான் வேண்டும்.

முதலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைப் பற்றி கிறிஷ்தவர்களின் வேதநூலான பைபிள் என்ன சொல்கின்றது என்பதனை சற்று ஆராய்ந்து விட்டு கேள்விக்கான விடைக்க வருவோம்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில்: –

‘புறஜாதிகளின் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள். ஜனங்களின் வழிபாடுகள் வீணாகயிருக்கிறது. காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள். அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். அவைகள் பனையைப் போல நெட்டையாய் நிற்கிறது. அவைகள் பேச மாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும், அவைகளுக்குப் பயப்படவேண்டாம். அவைகள் தீமை செய்யக் கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்’ (எரேமியா 10:2-4)

பைபிளின் இக்கூற்றிலிருந்து நாம் விளங்கக்கூடியது என்னவென்றால்: –

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும், கிறிஸ்துமஸ் மரம் நாட்டுவதும், அதை அலங்கரித்து வணங்குவதும் கிறிஸ்துவர்களின் மார்க்கத்தில் உள்ளவையன்று. கர்த்தர் விரும்பாத ஒன்று என்பதையும் நாம் அவர்களது பைபிளிலிருந்தே விளங்க முடிகின்றது. பைபிளின் போதனைக்கே கிறிஸ்தவர்கள் முரண்படுவது உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

எனவே முஸ்லிம்களாகிய நாம் அடிப்படையே இல்லாத ஒன்றின் பக்கம் தலைசாய்ப்பது தவறானதாகும். இஸ்லாத்தைப் பொருத்தவரை கிறிஸ்துமஸ் கொண்டாடுவதோ அல்லது அப்பண்டிகையில் கலந்து கொள்வதோ தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ‘புறஜாதிகளின் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள்’ என்று பைபிளும் கூறுகிறது. அதைத்தான் இஸ்லாமும் ஆணித்தரமாகக் கூறுகிறது. நமது மார்க்கமான இஸ்லாத்தில் நாம் உறுதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் புதியனவைகள் கலந்துவிடாமலும் கவனமாகவிருக்க வேண்டும். 

ஏனென்றால் அல்-குர்ஆனும் அல் ஹதீஸும் எவைகளை நமக்குப் போதிக்கின்றதோ அவைகள் மட்டுமே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய கிரியைகளாகும். அதுமட்டுமல்லாமல் ‘எவர் அந்நிய சமூகத்தைப் பின்பற்றுகிறாரோ அவரும் அந்நிய சமூகத்தவராவார்’ என்கின்ற ஹதீஸ் இங்கு நினைவு படுத்தப்பட வேண்டியதாகும். அத்தோடு நாம் எப்போதுமே எமது அகீதாவைப் பாதிக்கக் கூடிய விடயங்களில் மிகவும் பேணுதலாக இருக்க வேண்டும். எவைகள் மீது இஸ்லாத்தின் தூண்கள் நிலை பெற்றுள்ளதோ அவைகளைப் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமையாகும். ஏனென்றால் இஸ்லாம் மார்க்கமானது எப்போதுமே தீமைகளின் பக்கம் தலைசாய்ப்பதை விரும்பவில்லை.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மது, புகைத்தல், இசை, வீணான கேளிக்கைகள் போன்ற எத்தனையோ தீமைகள் அங்கே தலை விரித்தாடுவதை நாம் பார்க்க முடியும். அங்கு பங்கேற்கின்ற போது ஏதாவதொரு தீமையில் நாம் விழவேண்டிய சூழ்நிலை உருவாகும். நமது நன்பருக்காக என்று ஏதோ ஒன்றை நாம் செய்யப் போய் நாமேன் தீமைகளில் விழவேண்டும்?

எனவே தீமைகளை விட்டு ஒதுங்குவோம், தீமைகளுக்கு விலை போகாமல் நம் உள்ளங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைப்போம்.

இந்தக் கட்டுரை மூலம் கிறிஸ்தவர்களை நோகடிக்க வேண்டும் என்பது கடுகளவும் எமது நோக்கமல்ல. மாறாக இஸ்லாமியர்களுக்கு தங்களது மார்க்கத்தைத் தெளிவு படுத்துவதே எமது நோக்கமாகும் என்பதை தயவு செய்து இதனைப் படிக்கும் மாற்று மத சகோதரர்கள் புரிந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

by musawir