இஸ்லாம்

பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைத்தூதர் “மூஸா (அலை)” அவர்கள் கொடுங்கோல் ஆட்சி செய்த ஃபிர்அவ்னையும்,
அவனது சமுதாயத்தையும்
நல்வழிப்படுத்த இறைத்தூதராக
நியமிக்கப்பட்டார்கள்.

ஆனாலும் அவன் திருந்தவில்லை.
ஒன்பது அத்தாட்சிகளை மூஸா நபி அவர்கள்
காட்டிய பிறகும் அவன்
நம்பிக்கை கொள்ள மறுத்தான்.

மூஸா நபியையும்,
அவர்களை ஏற்றுக் கொண்ட மக்களையும்
கொடுமைப்படுத்தி வந்தான். முடிவில்
தமது சமுதாயத்தை அழைத்துக் கொண்டு தப்பித்து மூஸா நபி அவர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள்.

இதைக் கேள்விப்பட்ட ஃபிர்அவ்ன் தனது படையினருடன்
அவர்களை விரட்டி வந்தான். எதிரில்
கடல்! பின்னால் பிர்அவ்னின் படை!

இப்படிச் சிக்கல் மாட்டிக் கொண்ட மூஸா நபி அவர்கள் இறைவனின்
கட்டளைப்படி தமது கைத்தடியால் கடல் மீது அடித்தார்கள். கடல்
இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு பிளவும்
ஒரு மலை அளவுக்கு உயரமாக ஆனது.

இந்தப் பாதையில்
புறப்பட்டு மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் மறு கரையை அடைந்தார்கள்.
அதே பாதையில் விரட்டி வந்த ஃபிர்அவ்னும், அவனது படையினரும்
கடலில்
மூழ்கடிக்கப்பட்டு அறவேஅழிக்கப்பட்டனர்.

ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட
போது அவனை நோக்கி இறைவன் பின்வருமாறு கூறியதாகத்
திருக்குர்ஆன் கூறுகிறது.

“இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச்
செய்தோம்.ஃபிர்அவ்னும்,
அவனது படையினரும்
அக்கிரமமாகவும், அநியாயமாகவும்
அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது இஸ்ராயீலின் மக்கள்
நம்பியவனைத் தவிர
வணக்கத்திற்குரியவன்
வேறு யாருமில்லை என நம்புகிறேன். நான் முஸ்லிம் என்று கூறினான்.
இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். உனக்குப் பின் வருவோருக்கு நீ
சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்.
(என்று கூறினோம்.)
மனிதர்களில் அதிகமானோர்
நமது சான்றுகளை அலட்சியம்
செய்வோராகவே உள்ளனர்”.

திருக்குர்ஆன் 10:90-92

கடலில்
மூழ்கடிக்கப்பட்டவர்கள்
மீன்களுக்கு இரையாவார்கள்.
அல்லது கரை ஒதுங்கி அழுகிப்போவார்கள் என்பதை நாம்
அறிந்து வைத்துள்ளோம்.

ஆனால் ஃபிர்அவ்னின் உடல் அவ்வாறு அழியாது. அது என்னால்
பாதுகாக்கப்படும் என்று இறைவன் கூறுவதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலோ, அதைத் தொடர்ந்து பல
நுற்றாண்டுகளாகவோ அந்த உடல் எங்கே பாதுகாக்கப்பட்டுள்ளது?
எவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளது? என்ற விபரம் எதுவும் உலகுக்குத் தெரியவில்லை.

அன்றைக்கே அந்த
உடலை வெளிப்படுத்தி மக்கள் முன்
காட்டியிருந்தால் அந்த உடலைத் தொடர்ந்து பாதுகாத்திருக்க முடியாது.

பாதுகாக்கும்
வழிமுறைகளை அன்றைய மக்கள்
அறிருந்திருக்க வில்லை.
எந்தக் காலத்தில்
அதை வெளிப்படுத்தினால் மனிதர்கள் அதைப் பாதுகாத்துக்
கொள்வார்களோ அந்தக் காலத்தில்,

“1898ல் அவனது உடல்
பணிப்பாறைகளுக்கு இடையே கண்டு பிடிக்கப்பட்டு எகிப்தின்
தலை நகரம் கொய்ரோவில் உள்ள
அருங்காட்சியகத்தில்
பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த உடலின் வயதை அறிய கார்பன்
சோதனை உள்ளிட்ட அனைத்துச்
சோதனைகளும்
செய்து இது பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முந்தைய உடல்
என்பதை உறுதிப் படுத்தியுள்ளனர்.

பாதுகாக்கப்பட்ட பிர்அவ்னின் உடல், “திருக்குர்ஆன் “, “அல்லாஹ்வின் வேதம்” தான் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: